உன்மேலே அன்புகொண்டேன் உன் னாலே
அன்பாலே பாடுகிறேன் தன் னாலே
அம்மாநீ வந்து நின்றால் முன் னாலே
என்வாதை தீருமடி தன் னாலே
ஆயிரம் ஆயிராமாய் குற்றங்குறை கள்இருக்கும்
பாடுகின்ற பாடலிலும் எத்தனையோ பிழையிருக்கும்
ஆயிரம் இருந்தாலும் நானுமுன் பிள்ளையன்றோ
தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ
--கவிநயா
//தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ// excellent!! :)
ReplyDeleteகுற்றங்குறை இல்லாதோர் அவனியிலே எவருமில்லை;
ReplyDeleteபாட்டில் பிழை இருந்தாலும் பாவத்திலே பிழை இல்லை;
பிள்ளைகளிடையே அன்னை பேதபாவம் செய்வதில்லை;
தொல்லை யாவும் தீர்த்து வைப்பாள்;இதிலேதும் ஐயமில்லை;
////தாயென நீபரிந்தால் வெந்தணலும் சந்தனமன்றோ// excellent!! :)//
ReplyDeleteநன்றி சங்கர்!
//குற்றங்குறை இல்லாதோர் அவனியிலே எவருமில்லை;
ReplyDeleteபாட்டில் பிழை இருந்தாலும் பாவத்திலே பிழை இல்லை;
பிள்ளைகளிடையே அன்னை பேதபாவம் செய்வதில்லை;
தொல்லை யாவும் தீர்த்து வைப்பாள்;இதிலேதும் ஐயமில்லை;//
நல்லாச் சொன்னீங்க, லலிதாம்மா! நன்றி :)
அழகு
ReplyDeleteபாடலைப் படிக்கையிலே ஒரு பரவசம்
pl visit my blog for a sweet song on abiraami annai!
ReplyDelete//பாடலைப் படிக்கையிலே ஒரு பரவசம்//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, திகழ். நன்றி.
அன்னையின் அருளாளலும்,
ReplyDeleteதங்களது அன்பாலும் கண்டோம்..
அன்பன் சிவ. சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, சிவ.சி.மா. ஜானகிராமன் :)
ReplyDelete