காருண்ய தேவதையே காப்பாற்று காமினியே
பேருண்மை நீயேயடி!
வேருண்ட மண்போல நீயுண்ட என்மனதால்
வேறுண்மை தேடேனடி!
நீருண்ட மேகமென நீண்டிருக்கும் குழலழகி
நிலங்கொண்டு பதம்பணிந்தேன்!
காடுண்ட இருள்போல கருத்திருக்கும் விழியழகி
வலங்கொண்டு வணங்குகின்றேன்!
படங்கொண்ட அரவணிந்த பரமசிவன் நாயகியே
சிரங்கொண்டு பதம்பணிந்தேன்!
விடங்கொண்ட கண்டனவன் இடமிருக்கும் பைங்கிளியே
மனங்கொண்டு வணங்குகின்றேன்!
--கவிநயா
இந்த வாரம் இன்னும் பாட்டு வரலையேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். :-)
ReplyDeleteஅது சரி, வந்த பாட்டை படிச்சீங்களா இல்லையா? :)
ReplyDeleteஊருக்கு போயிட்டு திங்கள் இரவுதான் வந்தேன். அதான் தாமதம். ஒரேடியா அடுத்த செவ்வாய் போடலாமன்னு நினைச்சேன், முதலில், ஆனா மனசு கேக்கலை :)
விடங்கொண்ட கண்டனவன் இருக்கையிலே என்ன குறை ?
ReplyDeleteவாழ்த்துக்கள்...
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
மீண்டும் மீண்டும் படித்து படித்துப் பரமானந்தமடைந்தேன்!
ReplyDeleteதேன்சிந்தும் கவிநயப்பூந்தமிழ்ப் பாமாலை
தவழ்ந்திடும் மேனியளே!
'நான்' எனும் என்மன 'ஆணவம்'நீக்கியே
ஆட் கொள்வாய் அபிராமி!
படம் அழகு! - 'கவி'ப்
ReplyDeleteபாடமும் அழகு!
//விடங்கொண்ட கண்டனவன் இருக்கையிலே என்ன குறை ?//
ReplyDelete:) வருகைக்கு மிக்க நன்றி, திரு.ஜானகிராமன்.
//மீண்டும் மீண்டும் படித்து படித்துப் பரமானந்தமடைந்தேன்!//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி, லலிதாம்மா.
//தேன்சிந்தும் கவிநயப்பூந்தமிழ்ப் பாமாலை
தவழ்ந்திடும் மேனியளே!//
இது ரொம்பப் பிடிச்சிருக்கே :)
//'நான்' எனும் என்மன 'ஆணவம்'நீக்கியே
ஆட் கொள்வாய் அபிராமி!//
நானும் அதையே வேண்டிக்கிறேன்...
//படம் அழகு! - 'கவி'ப்
ReplyDeleteபாடமும் அழகு!//
நன்றி கண்ணா :)
nice :)
ReplyDelete//nice :)//
ReplyDeleteநன்றி ராஜேஷ்.
sooper akka :)
ReplyDelete