Monday, July 25, 2011
ஆடியிலே கூழு வச்சு...
ஆடியிலே கூழு வச்சு
ஆத்தா ஒனக்காகத் தந்தோம்
ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!
மஞ்ச குளிச்சுப் புட்டு
மங்கலமா பொட்டு வச்சு
மாவிளக்கு எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
மனசு வக்க வேணுமடி பொன்னாத்தா!
அச்சுவெல்லந் தட்டிப் போட்டு
பச்சரிசி பொங்க வச்சு
பக்குவமா எடுத்து வந்தோம் கண்ணாத்தா – நீயும்
பரிவு காட்ட வேணுமடி பொன்னாத்தா!
தாயே உன் காலடியே
தஞ்சமின்னு ஓடி வந்தோம்
தயங்காம எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
தயவு செய்ய வேணுமடி பொன்னாத்தா!
--கவிநயா
('செல்லாத்தா' பாடலின் பாதிப்பு :)
படத்துக்கு நன்றி: http://shakthinesaa.blogspot.com/2011/07/blog-post.html
Labels:
அன்னை,
கருமாரி அம்மன் பாடல்,
கருமாரி.,
கவிதை. பாடல்,
கவிநயா,
தேவி,
மாரியம்மா
Subscribe to:
Post Comments (Atom)
sellaaththaa !nenjil nillaaththaa!
ReplyDeletevery folk!! WOW!! :)
ReplyDelete//sellaaththaa !nenjil nillaaththaa!//
ReplyDeleteஅதேதான்!
வருகைக்கு நன்றி லலிதாம்மா.
//very folk!! WOW!! :)//
ReplyDeleteவருக சங்கர். பாடித் தாரீகளா? :)
இன்னொரு எளிமையான பாடல் அக்கா. என்னால இப்படி எழுத முடியாது.
ReplyDelete//இன்னொரு எளிமையான பாடல் அக்கா. என்னால இப்படி எழுத முடியாது.//
ReplyDelete:) எனக்கு உங்களை மாதிரி எழுத முடியாது :)
ரசிச்சதுக்கு நன்றி குமரா.
ஆடியும் வந்தது கண்ணாத்தா கவியும் பிறந்தது...
ReplyDelete//ஆடியும் வந்தது கண்ணாத்தா கவியும் பிறந்தது...//
ReplyDeleteஆமாம் :) வருகைக்கு நன்றி மாதேவி.
ஆடியிலே கூழு வச்சு
ReplyDeleteஆத்தா ஒனக்காகத் தந்தோம்
ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!
:)
ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு :)
மிக்க நன்றி :)
ReplyDeleteஆடியிலே கூழு வச்சு
ReplyDeleteஆத்தா ஒனக்காகத் தந்தோம்
ஓடிவந்து எங்களுக்கு கண்ணாத்தா – நீயும்
ஒதவி செய்ய வேணுமடி பொன்னாத்தா!
:)
தென்னை மர தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு ......
என்ற இசை மிகவும் அற்புதமாக பொருந்தி வருகிறது
ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ் :)
ReplyDelete