Friday, July 22, 2011

ஆ.வெ.1: படவேடு! - செல்லாத்தா!

ஆடி வெள்ளியில் ஆடி வரும், அழகி...
எங்கூருக்கு அண்மையில் உள்ள...படவேடு மாரியம்மன் = ரேணுகாம்பாள்!
குங்குமமே தராத அம்மன் கோயில்-ன்னா, இது மட்டுமே!

தொண்டை மண்டல அம்மன் கோயில்களில் படவேடு மிகவும் புகழ் பெற்றது!
ஆர்க்காடு-ஆரணி சாலையில் உள்ளது!
பெங்களூரில் இருந்து பள்ளிகொண்டா-வாழியூர் வழியாக வரலாம்; வேலூரில் இருந்து சந்தவாசல் வழியாகவும் வரலாம்!

சம்புவராயர் காலம் தொட்டு, பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கோயில் சூழ இருக்கும் ஆலயம்!
இந்த ஆலயங்கள் ஆற்று மணலில் புதையுண்டு போக, அதை மீட்டெடுத்து, TVS அறக்கட்டளை பேணி வருகிறது!

சுற்றிலும் வாழைத் தோப்பும் வயல்களும் மலைகளும் சூழ...
அம்மன்=ரேணுகை!
பரசுராமனின் தாய்!
மூலவரான அம்மன், முகம் மட்டுமே தரையில் ஊன்றியவள்!

அவளுக்குப் பின்னே, அத்தி மரத்தால் செய்த அம்மனின் முழுத் திருவுருவம்! ஆதிசங்கரர் நிறுவிய பாணலிங்கம் மற்றும் நானாகர்ஷணச் சக்கரமும் அருகில்!
இங்கு குங்குமப் பிரசாதம் கிடையாது!
ஆற்றோரமாய், ஜமதக்னி முனிவரின் யாக குண்டம் எனப்படும் திட்டிலிருந்து, ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மண்"நீறு" மட்டுமே தருவது வழக்கம்!ஜமதக்னி முனிவர்-ரேணுகாம்பாள் கதை பலரும் அறிந்த ஒன்றே!

தேவியின் அம்சமான ரேணுகை, தனது போர் வீரர்களுடன் யாத்திரை சுற்றி வர, சிவபெருமானின் அம்சமான ஜமதக்னி தங்கி இருக்கும் இடத்தில் வந்து சேர்கிறார்!
இரு கூட்டத்தாருக்கும் இடையே சண்டை மூள, தேவி நெருப்பினை ஏவ, முனிவர் கமண்டல நதியால் அதைக் குளிர்வித்து, பின்னர் அவளை மணமும் புரிந்து கொள்கிறார்!

இவர்களுக்குப் பிறந்தவனே பரசுராமன்!

ஒரு நாள்.....
ரேணுகை, ஆற்றிலே நீர் முகக்கும் போது, கந்தர்வனின் நிழல் கண்டு சற்றே சலனப்பட...
கற்பெனப் படுவது பிறன் "நெஞ்சு புகாமையோ"?.....
அப்படிப் பார்த்தால் யார் தான் கற்புள்ளவர்கள்? முருகா :((

ஜமதக்னி, அவள் "சலனம்" கண்டு சலனப்பட்டார்....
அவளை ஒதுக்குகிறார்!
மகன் பரசுராமனை ஏவி, அவளைக் கொல்லவும் சொல்லி ஆணையிடுகிறார்!
முனியின் சீற்றம் கண்டு, வேறு வழியே இன்றி, அவனும் தாயைத் துணித்து, தன் ஒரு கையையும் துணித்துக் கொள்கிறான்!

ஒரு சலனத்துக்கு, இத்தனை தொடர் சலனங்கள் தேவையா?
பரசுராமன் அழ.....சிவ சொரூபமான முனிவர் வருந்தி, ரேணுகையை உயிர்பித்துத் தரும் நீரைக் கமண்டலத்தில் தர,
பரசுராமனோ படபடப்பில், தாயின் தலையை, காட்டில் வேறொரு குயவப் பெண்ணின் உடலோடு பொருத்தி விடுகிறான்! புதிய ரேணுகை, எழுகிறாள்!

இந்த நிகழ்வுகளுக்குப் பின் முனிவர் மிகவும் ஒடுங்கிப் போய், தவம் இயற்றத் தொடங்க, வேறு ஒன்று சூழ்கிறது!
ஆசிரமத்தின் காமதேனுப் பசுவுக்கு ஆசைப்பட்டு, கார்த்தவீர்ய மன்னன் அவரைத் தவநிலையில் கொன்று விடுகிறான்!

சேதி அறிந்த பரசுராமன், அவனையும், அவன் தோன்றல்களையும், ஆணவம் பிடித்த அரசர்களையும் பூண்டோடு வீழ்த்த பெருங் கோலங் கொள்கிறான்!

முனிவரின் உடலை எரித்த நெருப்பிலே, ரேணுகையும் வீழ...
அப்போது பெய்த மழையால், அவள் மேல் தீக்காயங்கள் பரவின! வேப்பிலை போர்த்தியபடி எரியிலிருந்து எழ, ஈசன் அவளுக்கு அருள்கிறான்!
ஜமதக்னியும், ரேணுகையும் மேலுலகம் செல்லவிட்டு நிற்க....,

அவளோ, அவள் பட்ட மனத் துயரங்களின் நினைவாக, தலை உருவத்தை வழிபாட்டுக்குத் தந்து போகிறாள்!

எந்தத் தலை சலனப்பட்டதோ....அதே தலைக்கு வழிபாடு!
எந்தத் தலையைத் தண்டிக்கத் துணிந்தார்களோ....அதே தலைக்கு வழிபாடு!
கற்பெனப் படுவது....பிறன் நெஞ்சு புகாமையோ?
கற்பெனப் படுவது....இரு நெஞ்சங்களும் ஒருவரை ஒருவர் அறிவதே!


படவேடு ஆலயம் வயல்கள் சூழ, மலையின் கீழ் அமைந்துள்ளது!
விழாக் காலங்களில் கூட்டமும் நிறைய! ஆடியும், நவராத்திரியும் சிறப்பு விழாக்கள்! மற்றபடி, பெரிய வசதியுள்ள ஊர் கிடையாது!
சுற்றிலும் கிராமங்களே! அம்மன் கோயில் மட்டுமில்லாம, எல்லாக் கோயிலுக்கும் போகணும்-ன்னா, சாப்பாட்டுக்கு முன்னமேயே சொல்லிக்கிறது நல்லது! வெயிலில், பசி வயிற்றைக் கிள்ளும்!:)

மலை மேல் உள்ள முருகன் ஆலயமும், வேல் ஆலயமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! மிகவும் வித்தியாசமான முருகன்!
மயில் மேல் உட்காராமல், உய்ய்யரமாய்...."நின்று" கொண்டிருப்பான்!
ஏறு மயில் ஏறி, நெட்டைக் கொக்காய் நிற்கும் முகம் ஒன்றே! - டேய் நெட்டைக் கொக்கு முருகா - Stand up on the bench:)

இந்தக் கிராமச் சுழலும், இவனும்....சின்ன வயசில் முதன் முதலாகப் பார்த்த போது பறி கொடுத்தது-ன்னு நினைக்கிறேன்! அப்போ ரொம்ப சின்ன வயசு!
இவன் பொம்மையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டுத் தூங்கும் பழக்கம்....வாழைப் பந்தல் கிராமத்தில் என்னைப் பலரும் கேலி:)

முருகன்-ன்னா, தெய்வம்-ன்னே ஒரு உணர்வு வராம, என்னவன்-என்னவன்-ன்னு இப்படித் தான் ஆகிப் போனதோ? தெரியல!
பெருமாள்-ன்னாத் தான் தெய்வம், ஆலயத்தில் தமிழ் ஏற்றம், சாதி மறுப்பு, இராமானுசர்-ன்னு ஆகிப் போனது!

ஆலயத்துக்கு அருகிலேயே ஒரு வித்தியாசமான இராமன் கோயில்! அனுமன் கையில் ஏட்டுடன் படித்த படி முன்னே இருக்க...
இராமன் தியான கோலத்தில் உட்கார்ந்த வண்ணம், சீதை-இலக்குவன் அருகிருக்கும் காட்சி!
மயில் ராவணனின் மாயங்களை அடக்க முடியாமல் தவித்த போது, அனுமன் தேவியை வேண்டும் காட்சி! அதுவே படவேடு ஆலயத்துக்கு அருகில் அமைந்து விட்டது!

அழகான வயல்கள்! அழகான மலைகள்! அழகிய கிராமங்கள்!
சம்புவராயர் காலக் கல்வெட்டுகள்!
கைலாசப் பாறை, ஜலகம் பாறை, ஜவ்வாது மலை சூழ இருக்கும் காட்சி!
படவேட்டுக்கு ஒரு முறை அவசியம் சென்று வாருங்கள்! பெங்களுர்-சென்னை நெடுஞ்சாலை இன்னும் எளிது!இன்றைய ஆடி வெள்ளிப் பாடல்...அனைவரும் அறிந்த...செல்லாத்தா!
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
ஆல்பம்: தாயே கருமாரி

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
(செல்லாத்தா)

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா
(செல்லாத்தா)

பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
(செல்லாத்தா)

ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா - எங்கள்
ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா!


அம்மா......படவேடு தாயே!
மனம் இரங்கி என்னைப் பார்க்க மாட்டாயா? "என் முருகனுக்கு என்னை விதி" என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!

14 comments:

 1. அருமையான படங்களுடன், செய்தியுடன்... அழகான பதிவிற்கு நன்றி கண்ணா.

  ReplyDelete
 2. அழகான படங்கள். அருமையான படங்க்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. பாட்டு வரிகளும் ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 4. நன்றி கவி-க்கா! அடுத்த முறை இந்தியா போகும் போது, படவேடு போயிட்டு வாங்க! அப்படியே எங்கூருக்கும் வாங்க! :)

  ReplyDelete
 5. @ராஜேஸ்வரி - படங்கள் மட்டும் தான் அருமையா? :)

  @குமரன் - பாட்டு எழுதியது யார் என்று தெரியுமா?

  ReplyDelete
 6. படம் அழகு ;பதிவும் ரொம்ப அருமை;பெயர் [படவேடு]காரணம் ஆராயலையா?why only neeru;no kungumam ?பெங்களூரிலிருந்து எவ்வளவு தூரம்?

  ReplyDelete
 7. ஆம்ஸ்-இல் இருந்து வந்த களைப்பு...

  @லலிதாம்மா
  படவேடு=படைவீடு! முனிவரோடு பொர் செய்யும் முன், ரேணுகாம்பாள் அமைத்த படைவீடு!

  குங்குமம் இல்லை! விபூதியும் இல்லை! மண்ணில் எடுக்கப்படும் நீறு மட்டுமே! (புற்று மண் போல வச்சிக்கோங்களேன்)

  From Bangalore to paLLikonda = 3 hrs
  Need not touch Vellore, Take diversion before that!
  From there to Temple = 1 hr(max)

  ReplyDelete
 8. அப்போது பெய்த மழையால், அவள் மேல் தீக்காயங்கள் பரவின! வேப்பிலை போர்த்தியபடி எரியிலிருந்து எழ, ஈசன் அவளுக்கு அருள்கிறான்!:

  சிலிர்க்க வைக்கும் அருமையான பதிவு .

  அம்மா! தாயே கருமாரி!
  கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!

  ReplyDelete
 9. செல்லாத்தா செல்ல மாரியாத்தா
  எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
  கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
  இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
  உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
  இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா:)

  ReplyDelete
 10. ஒவ்வொரு வரிகளும் ஜிவ்வ்னு இழுக்குது . யார் எழுதிய வரிகள்..... தெரிஞ்சா .....................சொல்ல்லுங்.....க.................

  ReplyDelete
 11. next--- doubt
  ஆடி மாசம் அம்மனுக்கு அமெரிக்காவுல கூழு ஊத்துவாங்களா!

  ReplyDelete
 12. ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் தான் கேக்கணும்!

  ReplyDelete
 13. //ஆடி மாசம் அமெரிக்காவில் கூழா? கவிநயா அக்காவைத் தான் கேக்கணும்!//

  எதுக்கு என்னைய கேக்கணும்? :)

  எங்க ஊர் பக்கம் 'ஆடிக் கூழ்'னு ஒரு இனிப்பு செய்வோம். ரொம்ப ச்வீட்டா இருக்கும் :) போன ஆடியில் அவளுக்காக செஞ்சேன். இந்த முறை இன்னும் ஒண்ணுமே செய்யலை... :(

  //அப்படியே எங்கூருக்கும் வாங்க! :)//

  நீங்க இருந்தா சொல்லுங்க, வரேன்!

  ReplyDelete