
இங்கே கேட்கலாம்...
ஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும்.
ஓம் ப்ரக்ருத்யை நம:
விக்ருத்யை
வித்யாயை
ஸர்வபூத-ஹிதப்ரதாயை
ச்ரத்தாயை
விபூத்யை
ஸ¤ரப்யை
பரமாத்மிகாயை
வாசே
பத்மாலயாயை
பத்மாயை
சுசயே
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
ஸுதாயை
தன்யாயை
ஹிரண்மய்யை
லக்ஷ்ம்யை
நித்யபுஷ்டாயை
விபாவர்யை
அதித்யை
தித்யை
தீப்தாயை
வஸுதாயை
வஸுதாரிண்யை
கமலாயை
காந்தாயை
காமாக்ஷ்யை
க்ஷீரோதஸம்பவாயை
அனுக்ரஹ ப்ரதாயை
புத்தயே
அநகாயை
ஹரிவல்லபாயை
அசோகாயை
அம்ருதாயை
தீப்தாயை
லோகசோக-விநாசின்யை
தர்மநிலயாயை
கருணாயை
லோகமாத்ரே
பத்மப்ரியாயை
பத்மஹஸ்தாயை
பத்மாக்ஷ்யை
பத்மஸுந்தர்யை
பத்மோத்பவாயை
பத்மமுக்யை
பத்மநாபப்ரியாயை
ரமாயை
பத்மமாலாதராயை
தேவ்யை
பத்மின்யை
பத்மகந்தின்யை
புண்யகந்தாயை
ஸுப்ரஸன்னாயை
ப்ரஸாதாபிமுக்யை
ப்ரபாயை
சந்த்ரவதனாயை
சந்த்ராயை
சந்த்ரஸஹோதர்யை
சதுர்ப்புஜாயை
சந்த்ரரூபாயை
இந்திராயை
இந்து-சீதலாயை
ஆஹ்லாதஜனன்யை
புஷ்ட்யை
சிவாயை
சிவகர்யை
ஸத்யை
விமலாயை
விச்வஜனன்யை
துஷ்ட்யை
தாரித்ர்ய-நாசின்யை
ப்ரீதிபுஷ்கரிண்யை
சாந்தாயை
சுக்லமால்யாம்பராயை
ச்ரியை
பாஸ்கர்யை
பில்வநிலயாயை
வராரோஹாயை
யசஸ்வின்யை
வஸுந்த்ராயை
உதாராங்காயை
ஹரிண்யை
ஹேமமாலின்யை
தனதானயகர்யை
ஸித்தயே
ஸ்த்ரைணஸெளம்யாயை
சுபப்ரதாயை
ந்ருபமேச்மகதானந்தாயை
வரலக்ஷ்ம்யை
வஸுப்ரதாயை
சுபாயை
ஹிரண்யப்ராகாராயை
ஸமுத்ரதனயாயை
ஜயாயை
மங்களாயை
தேவ்யை
விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை
விஷ்ணுபதன்யை
ப்ரஸன்னாக்ஷ்யை
நாராயணஸமாச்ரிதாயை
தாரித்ர்யத்வமஸின்யை
தேவ்யை
ஸர்வோபத்ரவவாரிண்யை
நவதுர்க்காயை
மஹாகாள்யை
ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மி காயை
த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை
புவனேச்வர்யை
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://shrimatasharan.blogspot.com/2010/11/sri-lakshmi-puja.html
***
இந்த அட்டோத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு:
ஓம் இயற்கையே போற்றி!
ஓம் பலவடிவானவளே போற்றி!
ஓம் கல்வியே போற்றி!
ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
ஓம் இசைக்கப்படுபவளே போற்றி!
ஓம் செல்வமே போற்றி!
ஓம் விண்ணவளே போற்றி!
ஓம் உள்ளுறைபவளே போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் தாமரைக் கோவிலே போற்றி!
ஓம் தாமரையே போற்றி!
ஓம் தூய்மையே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அமுத ஊற்றே போற்றி!
ஓம் நன்றியே போற்றி!
ஓம் பொன்வடிவானவளே போற்றி!
ஓம் இலக்குமியே போற்றி!
ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
ஓம் ஒளியே போற்றி!
ஓம் அளவில்லாதவளே போற்றி!
ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
ஓம் கனலே போற்றி!
ஓம் உலகமே போற்றி!
ஓம் உலகைக் காப்பவளே போற்றி!
ஓம் தாமரையே போற்றி!
ஓம் கவர்பவளே போற்றி!
ஓம் காதற்கண்ணியே போற்றி!
ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!
ஓம் அறிவே போற்றி!
ஓம் குற்றமில்லாதவளே போற்றி!
ஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
ஓம் சோகமற்றவளே போற்றி!
ஓம் அழிவற்றவளே போற்றி!
ஓம் சுடரே போற்றி!
ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
ஓம் அருளே போற்றி!
ஓம் உலக அன்னையே போற்றி!
ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
ஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
ஓம் தாமரை அழகியே போற்றி!
ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!
ஓம் தாமரை முகத்தவளே போற்றி!
ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
ஓம் மகிழ்ச்சியே போற்றி!
ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் தாமரைத் திருவே போற்றி!
ஓம் தாமரை மணமே போற்றி!
ஓம் புனித மணமே போற்றி!
ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!
ஓம் ஒளிவட்டமே போற்றி!
ஓம் மதிமுகமே போற்றி!
ஓம் மதியே போற்றி!
ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
ஓம் நால்கரத்தாளே போற்றி!
ஓம் மதிவடிவானவளே போற்றி!
ஓம் நீலத்தாமரையே போற்றி!
ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
ஓம் உடல் நலமே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
ஓம் உண்மையே போற்றி!
ஓம் குறையில்லாதவளே போற்றி!
ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!
ஓம் நல வடிவே போற்றி!
ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
ஓம் அன்பு ஏரியே போற்றி!
ஓம் அமைதியே போற்றி!
ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!
ஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
ஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
ஓம் புகழே போற்றி!
ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!
ஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
ஓம் மான் ஒத்தவளே போற்றி!
ஓம் பொன்னணியாளே போற்றி!
ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
ஓம் பயனே போற்றி!
ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
ஓம் சுபம் அருள்பவளே போற்றி!
ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
ஓம் வரலட்சுமியே போற்றி!
ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!
ஓம் சுபமே போற்றி!
ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
ஓம் அலைமகளே போற்றி!
ஓம் வெற்றியே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
ஓம் மாதவன் துணையே போற்றி!
ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!
ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
ஓம் நவதுர்க்கையே போற்றி!
ஓம் மகாகாளியே போற்றி!
ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!
பொருள் வேண்டுமே. இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். :-)
ReplyDeleteஉண்மைதான் குமரா. மிக்க நன்றி அதனை நீங்களே தர முன் வந்ததற்கும் :)
ReplyDeleteஅம்மா, திருவள்ளூர் என்னைப் பெற்ற தாயாரே...கும்புட்டுக்கறேன்!
ReplyDelete//ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும்//
#டவுட்டு ஒவ்வொன்றின் துவக்கத்திலுமா? இல்லை மொத்தத் துவக்கத்திலா?
ஓம் சத்தானவளே போற்றி
ReplyDeleteஓம் இயற்கை வித்தானவளே போற்றி
ஓம் ஞானச் செல்வியே போற்றி
ஓம் பல்லுயிர்க்கும் பரிபவளே போற்றி
ஓம் வணங்கிடும் வல்லியே போற்றி!
ஓம் நீங்காத செல்வத் திருமகளே போற்றி
ஓம் விண்ணோர் விளக்கே போற்றி
ஓம் அனைத்துயிருக்குள் ஆவியே போற்றி
ஓம் தேன்மொழித் திருவே போற்றி
ஓம் தாமரைத் திருவே போற்றி!
//#டவுட்டு ஒவ்வொன்றின் துவக்கத்திலுமா? இல்லை மொத்தத் துவக்கத்திலா?//
ReplyDeleteடவுட்டுக்கு பதில் மயிலில் வந்திருக்கும் இந்நேரம் :)
//ஓம் சத்தானவளே போற்றி
ReplyDeleteஓம் இயற்கை வித்தானவளே போற்றி
ஓம் ஞானச் செல்வியே போற்றி
ஓம் பல்லுயிர்க்கும் பரிபவளே போற்றி
ஓம் வணங்கிடும் வல்லியே போற்றி!
ஓம் நீங்காத செல்வத் திருமகளே போற்றி
ஓம் விண்ணோர் விளக்கே போற்றி
ஓம் அனைத்துயிருக்குள் ஆவியே போற்றி
ஓம் தேன்மொழித் திருவே போற்றி
ஓம் தாமரைத் திருவே போற்றி!//
அழகா இருக்கு, கண்ணா. இது பொருளா, இல்ல சும்மானாச்சிக்குமா?
//அம்மா, திருவள்ளூர் என்னைப் பெற்ற தாயாரே...கும்புட்டுக்கறேன்!//
ReplyDeleteகனகவல்லித் தாயாரை நானும் வணங்கிக்கிறேன்! :)
//டவுட்டுக்கு பதில் மயிலில் வந்திருக்கும் இந்நேரம் :)//
ReplyDeleteஇனி கவிக்கா பதிவுக்கு காதைப் பிடிச்சிக்கிட்டு தான் வரணும் நானும் முருகனும்!:)
//இது பொருளா, இல்ல சும்மானாச்சிக்குமா?//
என்னாது? சும்மானாச்சியா? எம்புட்டு கடினப்பட்டு மொழியாக்கினேன்...
ப்ரக்ருத்யை = சத்து (அசித்), சித்து, ஈஸ்வரனில், பிரகருதி (உலகம்) என்பது சத்து
விக்ருத்யை = இயற்கை
வித்யை = ஞானம்
சர்வ பூத இத ப்ரதா = பல்லுயிர்க்கும் பரிபவள்
//இனி கவிக்கா பதிவுக்கு காதைப் பிடிச்சிக்கிட்டு தான் வரணும் நானும் முருகனும்!:)//
ReplyDeleteசில மாதிரியான கேள்விகள் கேட்டா மட்டும்! :)
//என்னாது? சும்மானாச்சியா? எம்புட்டு கடினப்பட்டு மொழியாக்கினேன்...//
:) ஸாரி, ஸாரி! எனக்கென்ன தெரியும்? பொருள் அப்படின்னு தெளிவா சொல்லணும், அப்புறம் 108-க்கும் சொல்லணும்!
//சர்வ பூத இத ப்ரதா = பல்லுயிர்க்கும் பரிபவள்//
இது ரொம்ப அழகு! என்ன்ன்னோட அம்மா :)
//சர்வ பூத இத ப்ரதா = பல்லுயிர்க்கும் பரிபவள் //
ReplyDeleteஎதுகை மோனை இருந்தாலும்,
இத ப்ரதா வா அல்லது ஹித ப்ரதா வா
ப்ரதா அப்படின்னா தருபவள், பரிபவள் என்றால் ரிகமன்ட் செய்பவள் .
அவளே கொடுக்கும்பொழுது ரெகமன்ட் செய்யவேண்டுமா என்ன ?
இல்லைன்னா, பரிபவள் அப்படிங்கறதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கா ?
ஹித அப்படின்னா நல்லது, நன்மை பயக்கக்கூடியது.
எல்லா உயிருக்கும் அவரவர்க்கு ( அது அதற்கு) ஏற்றபடி நன்மை பயப்பவள்
அப்படின்னா சரியா இருக்குமோ ?
கண்ணபிரான் ஸார் ! கைன்ட்லி கம் ஃபார்வேர்டு !!
ஃபார் யுவர் kind and critical அனாலிஸஸ் .
சுப்பு ரத்தினம்.
அருள் என்பதே ஹிதம் தானே?....எல்லா உயிர்க்கும் அருள்பவளே போற்றி எனலாமோ?
ReplyDeleteவாங்க சுப்பு தாத்தா. வாங்க மௌலி :)
ReplyDelete@சூரி சார்
ReplyDelete//இத ப்ரதா வா அல்லது ஹித ப்ரதா வா//
நான் தான் கிரந்தம் தவிர்த்து எழுதினேன்!:)
//ப்ரதா அப்படின்னா தருபவள், பரிபவள் என்றால் ரிகமன்ட் செய்பவள்//
பரி=பரிவு=பரிபவள்
இரங்குபவள்! அந்த இரக்கத்தால் கொடுப்பவள்!
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் "பரிந்து" - இதுல பரிதல் வெறுமனே இரங்குபவள் மட்டுமல்ல! இரங்கி, தாய்ப் பாலும் கொடுப்பவள்!
//கண்ணபிரான் ஸார் ! கைன்ட்லி கம் ஃபார்வேர்டு !!
ஃபார் யுவர் kind and critical அனாலிஸ//
ஆள விடுங்க! மீ ஞான சூன்யம்! எனக்கு ஒன்னும் தெரியாது!
இதம்=ஹிதம், தத்வம், ஹிதம், புருஷார்த்தம் - இதெல்லாம் மெளலி அண்ணா territory! அவரு தான் IPL ஆடிப் பந்தை அடிக்கணும்! அடியேன் பந்து பொறுக்குபவன் மட்டுமே! :)
அதான் மெளலி அண்ணா திரும்பி பதிவு உலகத்துக்கு வந்துட்டாரு-ல்ல?
ReplyDeleteAll questions re-directed to him!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! :)
என்னைப் பெற்ற தாயார் பதிவிலே வாழ்த்துச் சொல்லி, இன்னொரு தபா கும்புட்டுக்கறேன்!:)
அக்கா, நீங்க சொன்னபடி மொழிபெயர்த்து எழுதி இடுகையையிலும் இட்டுவிட்டேன். வாய்ப்பிற்கு நன்றி.
ReplyDeleteஇதற்காகவே இன்று விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்து எழுதினேன். :-)
76. ச்ரியை என்றால் அர்த்தம் என்ன.
Deleteஎனென்றால் அதிலிருந்து அர்த்தம் மாறுகிரது. (சமஸ்கிருத மந்திரம் compare pannupothu)
அன்னை இலக்குமியின் பதிவுக்கு வந்து பொருள் வேண்டும் என்று கேட்டிருக்கிறேன் பாருங்கள். அவள் ஏற்கனவே தந்திருக்கும் பொருளையே ஊருக்கெல்லாம் பகிர்ந்து வாழாமல இருக்கும் போது இன்னும் பொருள் வேண்டும் என்று கேட்டால் அது கொழுப்பு தானே?! :-)
ReplyDeleteஇரவி,
ReplyDeleteஇப்ப நான் பேசலை. மதுரை கணக்காயனார் மகன் பேசுறார் (எங்கப்பாவும் ஒரு கணக்காயனாராகத் தான் இருந்தார். அதனாலே இப்படி சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க).
சத்து, சித்து, ஆனந்தம் = சத் சித் ஆனந்தம் = சச்சிதானந்தம்ன்னு சொல்லுவாங்க.
சித், அசித், ஈசுவரன்னு இன்னொரு முப்பொருளைச் சொல்லுவாங்க.
நீங்க ரெண்டையும் கலந்து சொல்லிட்டீங்களோ?
சத் <> அசித்
அதனால் அசித் ஆன உலகம் உண்மை இல்லைன்னு பொருள் இல்லை. சித், அசித், ஈசுவரன் மூன்றுமே சத் தான்; உண்மை தான்.
அதனால் அசித் மட்டுமே சத் என்று வருவது போல் எழுதியது 'நெற்றிக் கண் திறந்தாலும்' குற்றமே. :-)
மற்றபடி அசித் = பிரகிருதி = இயற்கை = உலகம் என்பது சரி தான். :-)
//இதற்காகவே இன்று விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்து எழுதினேன். :-)//
ReplyDeleteஆஹா! ஸ்ரீ லக்ஷ்மி உங்களுக்கு எல்லா நலன்களும் அருளட்டும். 'பொருளு'க்கு மிக்க நன்றி குமரா! :)
//வள் ஏற்கனவே தந்திருக்கும் பொருளையே ஊருக்கெல்லாம் பகிர்ந்து வாழாமல இருக்கும் போது இன்னும் பொருள் வேண்டும் என்று கேட்டால் அது கொழுப்பு தானே?! :-)//
நீங்க சொன்ன பொருளின் பொருள் அவளுக்கு தெரியாதா என்ன? :)
//அதனால் அசித் மட்டுமே சத் என்று வருவது போல் எழுதியது 'நெற்றிக் கண் திறந்தாலும்' குற்றமே. :-)//
ReplyDeleteநெற்றிக் கண் உங்களது! அதை நான் எப்படித் திறக்க முடியும்? :)
பிழையாகப் பொருள் சொன்னமைக்கு மன்னியுங்கள் குமரன் அண்ணா!
பிரகிருதி=அசித்(ஞானமற்றவை)! அதுக்காக ஞானமற்றவளே-ன்னு துவங்க முடியுமா? அதான் சத்தானவளே-ன்னு சும்மானாங்காட்டியும் ஆக்கிட்டேன்!
ReplyDeleteஅனைத்துச் சத்துகளின் பிறப்பிடமும் மண் அல்லவா? தாது, உலோகம், உணவு, விதை-ன்னு...அந்தச் சத்து (தமிழ்ச் சத்து)! அதான் சத்தானவளே! :) Not the sanskritized sath!:)
108 போற்றித் தமிழாக்கம் நல்லா இருக்கு! ரொம்ப அழகா வந்திருக்கு! பெசன்ட நகர் அஷ்டலட்சுமி கோயில்ல குடுத்துறலாம்! படிக்கறவங்க படிச்சிப்பாங்க!
ReplyDelete//ஓம் நாராயணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!//
அருமை!
//ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!//
:)
உம்...சரி...அதனாலென்ன! பெண்ணா மாறிக்கிடறேன்!
// பிரகிருதி=அசித்(ஞானமற்றவை)! அதுக்காக ஞானமற்றவளே-ன்னு துவங்க முடியுமா? அதான் சத்தானவளே-ன்னு சும்மானாங்காட்டியும் ஆக்கிட்டேன்!
ReplyDeleteஅனைத்துச் சத்துகளின் பிறப்பிடமும் மண் அல்லவா? தாது, உலோகம், உணவு, விதை-ன்னு...அந்தச் சத்து (தமிழ்ச் சத்து)! அதான் சத்தானவளே! :) Not the sanskritized sath!:) //
பிரக்ருதி என்ற சொல் " சித் " என்று எதை உணர்கிறோமோ அது அல்லாது மற்ற எல்லாவற்றையும்
குறிக்கும். சித் என்பது ஒன்று தான் நிலையானது, உண்மையானது, என்கிற போது, இந்த " ஏனைய
மற்ற விஷயங்கள் எல்லாமே அசித் தான். அவற்றினை ஞான மற்றவை என்று பொருள் கொள்வதை விட
மாயை எனச்சொல்லலாம். பிரக்ருதி என்பதே மாயை தான்.
பரப்ரும்மம், இந்த மாயா ஸஹிதமாக இருக்கும்பொழுது ஈஸ்வரன் ஆக புரிந்துகொள்கிறோம். அவ்வளவு தான்.
அம்பாளை நாம் மாயே என அழைப்பதும் இதனால் தான். அவள் பிரும்ம ஸ்வரூபிணி. அதனால் மாயா.
மாயை விலகும்பொழுது, பிரும்மத்தை உணர்கிறோம்.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
சுப்பு ஸாரின் விளக்கம் அழகாகவும் எளிமையாகவும் இருக்கு!
ReplyDelete@குமரன்,
இந்திராயை என்ற சொல்லுக்கு 'தாமரையே போற்றி'என்பதைவிட
'நீலத்தாமரையே போற்றி' என்பது பொருந்துமோ?
இந்திரா=லக்ஷ்மி;விஷ்ணுவின் மனைவி;நீலத்தாமரை என்று அகராதியில் படித்தேன்;indigo என்ற சொல் இதிலிருந்துதான் வந்திருக்கும் என்பது என் ஊகம்!
நன்றி இரவி, சுப்பு ஐயா, லலிதா அம்மா.
ReplyDeleteஅம்மா, நீங்கள் சொன்னது போல் நீலத்தாமரை என்று மாற்றியிருக்கிறேன்.
//அம்பாளை நாம் மாயே என அழைப்பதும் இதனால் தான்.
ReplyDeleteமாயை விலகும்பொழுது, பிரும்மத்தை உணர்கிறோம்//
அம்பாள் ஈச்வரனை விட்டு விலகுவதா? அவள் அகலகில்லேன் இறையும் என்று இருப்பவள் அன்றோ? அவளா மாயை? அவள் விலகினால் தானா பிரம்ம-உணர்வு?
இந்த உரையாடல் அத்வைதம், விசிஷ்டாத்வைதம் வாதங்களுக்குத் தான் இட்டுச் செல்லும்.
ReplyDeleteசித் மட்டுமே உண்மையானது என்று சுப்பு ஐயா சொல்கிறார். அது அத்வைதத்தின்படி சரியாக இருக்கக்கூடும். ஆனால் விசிஷ்டாத்வைதத்தின் படி சித், அசித், ஈஸ்வரன் மூன்றுமே உண்மையானவை; நிலையானவை; அதனால் 'சத்' எனப்படுபவை (அடியேனும் மேலே அதனைத் தான் சொன்னேன்).
நிர்க்குண நிராகார பிரம்மம் மாயையுடன் சேர்ந்து உலகங்களைத் தோற்றுவித்து, காத்து, அழிக்கும் சகுண சகார ஈஸ்வரனாக (ஈஸ்வரன் = நாராயணன் ஆதிசங்கரரைப் பொறுத்த வரையில்) மாறுகிறது என்பது அத்வைதம். மாயை விலகும் போது பிரம்மம் ஒளிரும் என்பதும் அந்தத் தத்துவமே. ஆனால் பிரம்மத்தை மறைக்கும் அளவிற்கு மாயை பெரிதென்றால் மாயை பெரிதா பிரம்மம் பெரிதா? மாயை அம்பிகை/தாயார் என்றால் மாயை பிரம்மத்தை விட்டு விலகுவது என்பதே சாத்தியம் தானா? என்ற கேள்விகள் அன்றிலிருந்து கேட்கப்படுபவை.
மனமே தாழ்விற்கும் வாழ்விற்கும் காரணம் என்பதைப் போல் மாயை உருவினளான அம்மையே இறைவனை அடையும் வழியைக் காட்டுபவள்; அவளையும் சேர்த்தே நாரணனை அடைக்கலமாக அடையவேண்டும்; அவளும் அவனும் இணைந்ததே பிரம்ம சுவரூபம்; மிதுனமே (இருவரும் சேர்ந்ததே) பிரதானம்; திருமகளும் நம்மையுடையவள் என்பதெல்லாம் விசிஷ்டாத்வைதம் சொல்பவை.
//அம்பாள் ஈச்வரனை விட்டு விலகுவதா? அவள் அகலகில்லேன் இறையும் என்று இருப்பவள் அன்றோ? அவளா மாயை? அவள் விலகினால் தானா பிரம்ம-உணர்வு? //
ReplyDeleteமாயா ஸஹித ஈஸ்வரம் ப்ரும்மம்.
மாயா ரஹித பிரும்மம் ஈஸ்வரன்.
பிரும்மம் , ஈஸ்வரன் என்ற இரு கான்ஸப்ட்கள் சரியாக உணரப்படின், ஐயங்கள் ஏற்பட ஏதுவில்லை.
பிரும்மம், மாயையுடன் கூடிய நிலை ஈஸ்வரன். ஈஸ்வரன் என்ற நிலையில் தான் அம்பாள் ஸஹிதம்.
பிரும்மம் என்பது ஏகம். அதை அனேகமாக உணர்வதுவே மாயை.
ஸ ஏகஹ என்பது வாக்யம். அந்த பிரும்மம் என்பது பரம்பொருள் . அந்த பரம்பொருள் எல்லாமே
எல்லாமே அவனிடத்தில் ஸானித்யம். கன்வர்ஸ்லி, அவன் எல்லாமாகத் தோன்றுகிறான். அந்த " எல்லா" த்தில்
அம்பாளும் ப்ரதீக உபாசனையில் ஒரு கல்பித பிரும்மம் தான் என்கையில், அம்பாளுக்குச் செய்யும் உபாசனைகள்
யாவுமே அந்த பிரும்ம உபாசனைதான். இதுவே என்னுடைய அன்டர்ஸ்டான்டிங்.
எல்லாமே அவனிடத்தில் ஸானித்யம் என்னும்பொழுது, அம்பாளும்
ஈஸ்வரனோடு ஸானித்யம் தான். ஈஸ்வரன் அம்பாள் வடிவில் நமக்குத் தோற்றமளிக்கிறார் என்று
வேண்டுமானால், ஒரு புரிதலுக்காக, சொல்லிக்கொள்ளலாம்.
சுப்பு ரத்தினம்.
சுப்பு ஐயா,
ReplyDeleteநீங்கள் சொல்வது அத்வைதத்தின் படி சரி தான். ஆனால் முதலில் சொன்ன இரு வாக்கியங்களில் பிழை இருப்பது போல் தோன்றுகிறது. சரி பாருங்கள்.
மாயா ஸஹித ப்ரம்மம் ஈஸ்வரன் = மாயையுடன் கூடிய பிரம்மம் ஈசுவரன்
மாயா ரஹித ஈஸ்வரன் ப்ரம்மம் = மாயையுடன் கூடாத ஈசுவரன் பிரம்மம்
விசிஷ்டாத்வைதத்தின் படி ஈசுவரன் பிரம்மம் இரண்டும் தனித்தனியான நிலைகள் இல்லை; இரண்டுமே ஒரே நிலை தான். அதனால் மாயையெனப்படும் தாயார் பிரம்மத்தை மறைத்து ஈசுவரனாகக் காட்டுபவள் என்றோ அவள் விலகும் போது மாயை விலகி ஈசுவரன் பிரம்மமாகக் காணப்படும் என்றோ சொல்வதை ஒத்துக்கொள்வதில்லை. அப்படியென்றால் இங்கே மாயை என்றால் என்ன? மாயையுடையவன் மாயவன், மாயோன் என்னும் போது மாயை என்பது மறைக்கும் ஒரு பொருள் என்ற அருத்தத்துடன் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை; மாயை என்பது நம் அறிவிற்கு எட்டாத வியப்பான செயல்கள்; இந்த பிரபஞ்சம் அப்படி வியப்புகள் நிறைந்தவை; விசித்திரமானது; அதனால் மாயை எனப்படுவது; அதுவே தாயார்; அவளை உடையவன் மாயவன்; இந்த மாயையே அவனைக் காண்பதற்கும் வழி வகுக்கும் கருணை வடிவினள்; கருணா மூர்த்தியான ஈசுவரன்/பிரம்மத்தின் கருணையே மாயையான இவள் தான்; இப்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.
ReplyDeleteஅடியேன் விசிஷ்டாத்வைதி. நீங்கள் அத்வைதி. இரவிசங்கர் யார் என்று அவரே சொல்லட்டும். அத்வைத விசிஷ்டாத்வைத த்வைத தத்துவ உரையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாமும் தொடர்ந்தால் மேலும் தொடரும்.
//இரவிசங்கர் யார் என்று அவரே சொல்லட்டும்.//
ReplyDelete:)))
நான், என் முருகனுக்குச் சொந்தமானவன் மட்டுமே!
//அத்வைத விசிஷ்டாத்வைத த்வைத தத்துவ உரையாடல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாமும் தொடர்ந்தால் மேலும் தொடரும்//
ReplyDeleteஆளை விடுங்க! :)
அவள்=மாயை!
அவள் விலகும் போது அவனை உணர்கிறோம்-ன்னு சொன்னதால், கொஞ்சம் கூடப் பொருந்தலையே-ன்னு அப்படிக் கேட்டேன்!
* அம்மா=மாயை
* அம்மா நீங்கிய அப்பா=பிரம்மம்
-ன்னு கேக்கவே நல்லா இல்ல!
இதுக்குப் போயி பாஷ்யம், உரை-ன்னுக்கிட்டு, ப்ளேட்டை அப்படியும் இப்படியும் மாத்தி மாத்திப் போட்டு, அதுக்குத் தத்துவம்-ன்னு பேரை வேற குடுத்து, பாதி சங்கரர் சொன்னதும், மீதி சங்கரர் சொல்லாததும் எல்லாம் சேர்த்து, நாமளா Hybrid உருவாக்கி...
Complicating the Uncomplicated :)))
இந்த வடமொழி வேதங்கள்...
ஏகம் சத்,
தத்-தவ்ம்-அசி,
அஹம் பிரம்மாஸ்மி
மாயை...
பிரம்ம சத்யா ஜகன் மித்யா
....
அப்படி இப்படி-ன்னு ஒத்தை வாக்கியத்தில், ஏதோ பஞ்ச் டயலாக் சொல்லிட்டாப் போல உளறிக் கொட்டும்! :))
அதன் சங்காத்தமே எனக்கு வேணாம்! :)
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
ஒரே வரி!
உன்தன்னோடு(அ)-உறவேல்(உ)-நமக்கு(ம்) = ஒழிக்க ஒழியாது!
புகல்-ஒன்று-இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
- இந்தத் தமிழ் வேதமே போதும்!
//ஈசுவரன் பிரம்மம் இரண்டும் தனித்தனியான நிலைகள் இல்லை; இரண்டுமே ஒரே நிலை தான்//
ReplyDeleteஅப்போ அதைத் தான் அ+த்வைதம்-ன்னு சொல்லணும்! ரெண்டில்லை-ஒன்னு!
அதை எதுக்கு விசிஷ்டாத்வைதம்-ன்னு சொல்றீங்க? Gazette-ல பேரை மாத்துங்க! :))
ஹ்ம்...இங்கே என்ன நடக்குது?
ReplyDelete"ஹிதம் vs ப்ரியம்" என்று கண்ணன் பாட்டில் ஒரு பதிவிடப் போகிறேன். :-)
ரவி,
ReplyDeleteஎன்னைப் பெற்றவள் திருநின்றவூரில் இருக்கிறாள். :-)