Monday, November 14, 2011

அம்மா, அருள்வாய்!



அம்மா அருள்வாயே
மன அமைதி தருவாயே
சஞ்சலங்கள் ஏதுமின்றி
சந்ததமும் உன்னைப் பாட

(அம்மா)

அன்னை உனையே நாட வேண்டும்
கன்னல் தமிழால் பாட வேண்டும்
முன்னால் பின்னால் மிரட்டும் வினைகள்
தன்னால் பயந்து ஓட வேண்டும்

(அம்மா)

குற்றங் குறைகள் நிறைந்த பிள்ளை
குறுகி உன்னைப் பணியும் வேளை
கற்றை அன்பை நீதான் பொழிந்து
சற்றே மடியில் ஏந்த வேண்டும்

(அம்மா)

கனவிலேனும் உன்னைக் காண
காலடியில் கண்ணீர் வார்க்க
விழியில் வழியும் அன்பைப் பருக
வழியில் நிறைந்த முட்கள் தொலைய

(அம்மா)


--கவிநயா

3 comments:

  1. //குற்றங் குறைகள் நிறைந்த பிள்ளை
    குறுகி உன்னைப் பணியும் வேளை
    கற்றை அன்பை நீதான் பொழிந்து
    சற்றே மடியில் ஏந்த வேண்டும்//


    நீயே சரணம் அம்மா கருமாரி.

    படம் அருமை

    ReplyDelete
  2. தாயே! என்மேல் தாள் பதித்து

    மாயவலையை அறுக்கவேண்டும்;

    சாயும்போதும் என்நெஞ்சம் உன்

    தூய தாளைத்துதிக்க வேண்டும் .

    ReplyDelete
  3. வருகைக்கு மிக்க நன்றி, கைலாஷி, மற்றும் லலிதாம்மா.

    ReplyDelete