Monday, November 28, 2011

ஏனிந்த மௌனமடி?


யாரிடம் சொல்லி அழ – எவர்
மடியினில் சென்று விழ?
தேம்பி யழ வேணும் – அதற்கு
தாயுன்றன் மடி வேணும்

பாரமும் மிகவாச்சு – போகும்
பாதையும் முரடாச்சு
தேகமும் களைச்சாச்சு – உன்னை
தேடி நான் சலிச்சாச்சு

ஏனிந்த மௌனமடி – ஏனோ
எனக்கிந்த துயரமடி
அடைக்கலம் தந்திடவே – உனக்கு
ஏனிந்த தயக்கமடி?


--கவிநயா

7 comments:

  1. சொல்லடி அபிராமி!..நீயோர்

    கல்லுச்சிலைதானோ?

    தெள்ளுத்தமிழ்த் துதிக்கு இளகா

    உள்ளம் இரும்பன்றோ?

    ReplyDelete
  2. //சொல்லடி அபிராமி!..நீயோர்

    கல்லுச்சிலைதானோ?

    தெள்ளுத்தமிழ்த் துதிக்கு இளகா

    உள்ளம் இரும்பன்றோ?//

    ரசித்தேன் அம்மா. அவ உள்ளம் கரும்புதான். இருந்தாலும் அப்பப்ப புலம்பாம இருக்க முடியலை. support-க்கு நன்றி லலிதாம்மா :)

    ReplyDelete
  3. //no words:) excelent!!!//

    ரொம்ப நாளாச்சு பார்த்து. நன்றி ராஜேஷ்!

    ReplyDelete
  4. //Very Nice.Great post.//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி அமிர்தா. (உங்க பேர் அழகா இருக்கு :)

    ReplyDelete
  5. yenintha kalakkam.Annai sekkirame arul purival.
    Natarajan.

    ReplyDelete