Monday, December 12, 2011

எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டும்!


எப்பொழுதும் உன்நினைவாய் இருக்க வேண்டுமே – அம்மா
தப்பாமல் உன்பெயர்உச் சரிக்க வேண்டுமே
முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டுமே - ஒரு
கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டுமே

பிச்சையென ஒருவரம்நீ கொடுக்க வேண்டுமே – எந்தன்
இச்சையெல்லாம் நீயாக இருக்க வேண்டுமே
துச்சமென இவ்வுலகை நினைக்க வேண்டுமே – அம்மா
மெச்சியுந்தன் புகழைதினம் படிக்க வேண்டுமே

இன்பதுன்பம் இரண்டுமொன்றாய் கொள்ள வேண்டுமே - அம்மா
உண்மைஇன்பம் நீயெனவே உணர வேண்டுமே
பக்திகொண்டு சக்திதன்னை பாட வேண்டுமே – அம்மா
சக்திமீது பித்துகொண்டு வாழ வேண்டுமே!


--கவிநயா

6 comments:

  1. காண்பதிலெல்லாம் நீ தெரிய வேண்டுமே ..செவி

    கேட்பதெல்லாம் உன்துதியாய் ஒலிக்கவேண்டுமே .

    தாயுன் நினைவில் என்னை மறக்க வேண்டுமே.. அம்மா!

    என்னுள்ளும் உன்போல் அன்பு சுரக்கவேண்டுமே .

    ReplyDelete
  2. அருமையான பாட்டு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கற்பூர நாயகியே கனகவல்லி பாடலில் இந்த வரிகளெல்லாம் இருப்பது இது வரை தெரியாமல் போய்விட்டதே! :-)

    ReplyDelete
  4. நல்லா சொன்னீங்க லலிதாம்மா. நன்றி :)

    ReplyDelete
  5. //Rathnavel said...

    அருமையான பாட்டு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி ஐயா.

    முகநூல்னா என்னன்னு கொஞ்ச நேரத்துக்கு புரியலை! பிறகுதான் 'facebook'னு உறைச்சது :) எனக்கு account இல்லை; பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  6. //கற்பூர நாயகியே கனகவல்லி பாடலில் இந்த வரிகளெல்லாம் இருப்பது இது வரை தெரியாமல் போய்விட்டதே! :-)//

    ஆமால்ல? பல சமயம், என்ன பாட்டுன்னே தெரியாம ஏதாவது ஒரு மெட்டு உள்ள ஓடிக்கிட்டிருக்கும், அதே மெட்டில் எழுதிடுவேன். அப்படி அமைந்ததுதான் இதுவும். நீங்க சொன்ன பிறகுதான் realize பண்றேன்!

    வாசித்தமைக்கு மிக்க நன்றி குமரா.

    ReplyDelete