Thursday, January 26, 2012

அம்மா!அம்மா!


சுப்பு சார் பாடித் தந்ததைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!

அம்மா!அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

தாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா!
பெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா!
மெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா!
புன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா !

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

இதமான சுகநாதம் அம்மா,அம்மா!
இதயத்தின் சங்கீதம் அம்மா,அம்மா!
முதலான மதலைச்சொல் அம்மா,அம்மா!
நிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

அன்பகமே!செண்பகமே!அம்மா,அம்மா!
அஞ்சுகமே!எனக்கபயம் !அம்மா,அம்மா!
நின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா!
நின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா!

"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

3 comments:

  1. அருமை அம்மா. சுப்பு தாத்தா இனிமையாகப் பாடியிருப்பதையும் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  2. 1] ரத்னவேல் ஐயா ,

    வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி



    2]கவிநயா

    சுப்பு ஐயா பாடியதை இணைத்து உதவியதற்கு நன்றி;

    பாட்டை ரசித்து பின்னூட்டம் அளித்தது மகிழ்ச்சியளிக்கிறது :))

    ReplyDelete