Thursday, March 29, 2012

மங்கலம் அருளிடுவாள்!

வசந்த நவராத்திரிக்காக மாதங்கி என்கிற மீனாக்ஷியின் மீது ஒரு பாடல்...

வசந்த நவராத்திரிக்கென நம் சுப்பு தாத்தா, வசந்த ராகத்திலேயே பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! நன்றி தாத்தா!

மங்கலம் அருளிடுவாள் மங்கை மீனாட்சி
மனதினில் என்றென்றும் அன்னை அவள் அன்பாட்சி

மரகத வடிவினளாம் மதுரையின் கோமகளாம்
சிரந்தனில் மணிமுடியாம் கரந்தனில் செங்கோலாம்
மீனென கருவிழியாம் மானென அவள் நடையாம்
தேனவள் கனி மொழியாம் வானவள் அருட் பொழிவாம்

சொன்னதைச் சொல்லும் கிளி தோளினில் அமர்ந்திருக்கும்
சொக்கனிடம் சொக்கியவள் கன்னங்களில் சிவப்பிருக்கும்
சின்னஞ்சிறு செவ்விதழில் குறுநகை மலர்ந்திருக்கும்
வண்ண மலர்ப் பாதங்கள் அஞ்சுவரைக் காத்திருக்கும்!

--கவிநயா

9 comments:

  1. சொன்னதைச் சொல்லும் கிளி தோளினில் அமர்ந்திருக்கும்
    சொக்கனிடம் சொக்கியவள் கன்னங்களில் சிவப்பிருக்கும்
    சின்னஞ்சிறு செவ்விதழில் குறுநகை மலர்ந்திருக்கும்
    வண்ண மலர்ப் பாதங்கள் அஞ்சுவரைக் காத்திருக்கும்!

    சொக்கும் வரிகளில் மனம் லயித்தது..

    அருமையான மங்கலம் அருளும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. சொன்னதைச் சொல்லும் கிளி தோளினில் அமர்ந்திருக்கும்
    சொக்கனிடம் சொக்கியவள் கன்னங்களில் சிவப்பிருக்கும்
    சின்னஞ்சிறு செவ்விதழில் குறுநகை மலர்ந்திருக்கும்
    வண்ண மலர்ப் பாதங்கள் அஞ்சுவரைக் காத்திருக்கும்!

    சொக்கும் வரிகளில் மனம் லயித்தது..

    அருமையான மங்கலம் அருளும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. சொன்னதைச் சொல்லும் கிளி தோளினில் அமர்ந்திருக்கும்
    சொக்கனிடம் சொக்கியவள் கன்னங்களில் சிவப்பிருக்கும்
    சின்னஞ்சிறு செவ்விதழில் குறுநகை மலர்ந்திருக்கும்
    வண்ண மலர்ப் பாதங்கள் அஞ்சுவரைக் காத்திருக்கும்!

    சொக்கும் வரிகளில் மனம் லயித்தது..

    அருமையான மங்கலம் அருளும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. http://youtu.be/aJ4LdNDMxNE

    vasantha raagam.
    vannamayamaana ungal paadal
    olikkamattum illai,
    olirvidavum seikirathu.
    vaazhththukkal.

    subbu rathinam

    ReplyDelete
  5. //சொக்கும் வரிகளில் மனம் லயித்தது..

    அருமையான மங்கலம் அருளும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//

    மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  6. //vasantha raagam.
    vannamayamaana ungal paadal
    olikkamattum illai,
    olirvidavum seikirathu.
    vaazhththukkal.//

    மிகவும் அருமை தாத்தா. நடனத்துக்கும் பொருத்தமாக இருக்கும்! மிக்க நன்றி.

    ReplyDelete
  7. வசந்த நவராத்ரிக்கு,வசந்த ராகப்பாடல்!கேட்டு மிகவும் ரசித்தேன்;நன்றி!

    ReplyDelete
  8. /வசந்த நவராத்ரிக்கு,வசந்த ராகப்பாடல்!கேட்டு மிகவும் ரசித்தேன்;நன்றி!//

    நன்றி லலிதாம்மா!

    ReplyDelete
  9. enna arumaiyaana varigal!Aval Paadangal Nammai ellaam kaakkattum.
    Natarajan.

    ReplyDelete