சுப்பு தாத்தா ஷண்முகப்ரியாவில் உருகியிருப்பதை நீங்களும் கேளுங்கள். மிக்க நன்றி தாத்தா!
10.
கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி
சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி
ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை
கருடனைக் கொடியில் கொண்ட குமுதனின் காதல் தேவீ
நீயேதான் ஞானம் கல்வி அனைத்தையும் ஆளும் ராணி
பிறைதனை முடியில் கொண்ட பித்தனின் மனையும் ஆவாய்
யுகமது முடியும் போது அழிக்கின்ற சக்தியும் ஆவாய்
ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
உலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!
11.
ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை
ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை
ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை
புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை
நற்பலன்கள் எல்லாம் அளிக்கும் நான்மறையின் தலைவி போற்றி
அகிலத்தின் அழகுக் கெல்லாம் ஆதார ஸ்ருதியே போற்றி
அழகுக்கு அழகு செய்யும் அழகுருவே அமுதே போற்றி
ஆயிரம்இதழ் தாமரையில் அமர்ந் தாட்சி செய்வாய் போற்றி
செல்வங்கள் எல்லாம் வணங்கும் செல்வநா யகியே போற்றி
புருஷோத்தமன் மார்பில் விளங்கும் பொன்மகளே போற்றி போற்றி!
12.
நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை
நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை
நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை
நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை
எழி லென்னும் சொல்லுக்குப் பொருளான திருவே போற்றி
கமலந்தான் விரிந்தது போல் மலர்ந்திட்ட முகத்தாய் போற்றி
கடைந்திட்ட பாற்கடலில் கதிரவன்போல் உதித்தாய் போற்றி
இன்னமுதும் மதியும் மகிழ இளையவளாய் எழுந்தாய் போற்றி
ஆதிசேஷன் மடியில் துயிலும் அரங்கனவன் மனையே போற்றி
அஞ்சனக் கருமை வண்ணன் அருமைத் துணையே போற்றி போற்றி!
--கவிநயா
(தொடரும்)
ஆக்கலில் தொடங்கி ஐந்து தொழில்களும் நீயே செய்வாய்
ReplyDeleteஉலகெல்லாம் போற்றும் உன்னை வணங்கி நான் வாழ்த்துவேனே!
கனகதாரையாய் பொழிந்த அருமையான பகிர்வு..
பாராட்டுக்கள்..
//கனகதாரையாய் பொழிந்த அருமையான பகிர்வு..
ReplyDeleteபாராட்டுக்கள்..//
ரசித்தமைக்கு நன்றிகள் அம்மா. அவளருளால் வாய்த்தது.
http://youtu.be/5yeYHhVTCV0
ReplyDeleteyou may
Listen here the three songs in Raag Shanmughapriya
the sanskrit version is not also sung for want for adequate allowance of space in youtube.
subbu rathinam
கவிநய சுகந்தம் கமழும் பாமலர்வாழ் பார்கவி போற்றி!
ReplyDeleteஒப்பற்ற சுப்பு ஐயாவின் இசையில் வாழ் செல்வியே போற்றி!
மிக்க நன்றி தாத்தா. நீங்கள் பாடியதைச் சேர்த்த பிறகு, இந்தப் பக்கம் வரவே மறந்துட்டேன். மன்னிச்சுக்கோங்க.
ReplyDeleteஆசிகளுக்கு மிக்க நன்றி லலிதாம்மா.
ReplyDelete