Monday, April 9, 2012

கனக தாரை - 13,14,15

Sri Vishnu Bhagwan and Lakshmi Mata

சுப்பு தாத்தாவின் அருமையான இசைத் திறனை இங்கே ரசிக்கலாம்! நன்றி தாத்தா!

13.
நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை
நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை
நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை
நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை


தங்கத் தாமரை மீதில் வீற்றிருக்கும் தாயே போற்றி
தாமரைகள் தாள் பணியும் தாமரை வதனியே போற்றி
தரங்கக் கடலின் நடுவே முகிழ்த்ததா மரையே போற்றி
தரணி யெல்லாம் ஆளுகின்ற தன்னிகரில்லாத் தலைவி போற்றி
தேவருக்கு அருளுகின்ற தேவதேவி தாள்கள் போற்றி
சாரங்க மேந்துகின்ற சக்ரபாணி சகியே போற்றி போற்றி!


14.

நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை


பிரம்ம தேவன் புத்திரனாம் பிருகுவின் புதல்வியே போற்றி
ஸ்ரீயென்னும் பெயர் கொண்டு ஸ்ரீதரனை மணந்தாய் போற்றி
கோவிந்தனின் மார்பில் விளங்கும் கோமள வல்லியே போற்றி
தாமரையைத் தன் னுடைய இருப்பிடமாய்க் கொண்டவளே போற்றி
தாமரைக்கு எழில் கூட்டும் இன்னமுதத் தாமரையே போற்றி
தாமோ தரனை வரித்த தாமரைக் கரத்தாளே போற்றி போற்றி!

15.
நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை
நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை
நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை


கதிரவனின் காதலியாம் கமலத்தில் வசிப்பவளே போற்றி
கமலத்தின் நடுவினிலே கதிரவன் போல் ஒளிர்பவளே போற்றி
புவி யாக்கும் அன்னையே பூ தேவியே போற்றி
புவி காக்கும் அன்னையே ஸ்ரீ தேவியே போற்றி
வான வரெல்லாம் வணங்கும் வசுந் தரியே போற்றி
நந்த கோபன் மருமகளே திருமகளே போற்றி போற்றி!

--கவிநயா

(தொடரும்)

3 comments:

  1. சுப்பு ஐயாவின் பாட்டுக்காக காத்திண்டிருந்தேன்;என்னாச்சு?

    ReplyDelete
  2. http://youtu.be/_YqraIxz81A

    late aa vandhaalum latest aa vandhutten.

    itho inge .

    sindhu bhairavi, saaranga and madhyamavathi raagas.

    in a virutham pattern.

    subbu thatha.

    ReplyDelete
  3. கேட்டேன்;ரசித்தேன்;நன்றினேன்!

    ReplyDelete