ஏன்  ஏங்க வைக்கிறாய் ?
சுப்பு சார் சுருட்டி ராகத்தில் பாடித் தந்ததை இங்கே கேட்டு மகிழுங்கள்! நன்றி சார்!
 
கோடிக்கதிரவர்கள்  கூடியே  உதித்தாலும் 
ஈடாமோ தாயே !உன் முக ஒளிக்கு?
தாரகைகளெல்லாமே  இணைந்தாலும்  இணையாமோ
காரிகையுந்தன்  அருளொளிர் விழிக்கு?
உன்னையுள்ளந்தன்னில்  உணர்ந்தபின்னர்  பொன்னும் 
மண்ணாய் ,மரத்துகளாய்த் தோணுதம்மா!
மரகதம் ,மாணிக்கம் ,முத்து,வைரமெல்லாம்
கருங்கல்லாய் ,கரித்துண்டாய்க் காணுதம்மா!
பிறைநிலவைத் தரித்தென்னுள்  தண்ணொளி  வீசுகின்றாய்!
கரும்புக் கரங்காட்டிப்  பேசாமல் பேசுகின்றாய்!
அன்பெனுமின்ப  மலரம்பாலே  தைக்கின்றாய்!
கண்முன்னே  வாராமல்  ஏன் ஏங்க வைக்கின்றாய்?
 



