Monday, May 28, 2012

எங்கும் எதிலும் நீ!




சுப்பு தாத்தா கானடா ராகத்தில் இனிமையாக அமைத்திருப்பதைக் கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


எண்ணியெண்ணிப் பார்க்கையிலே எண்ணமெல்லாம் நீயிருப்பாய்!
பண்ணெடுத்துப் பாடுகையில் பாட்டுக்குள்ளே நீயிருப்பாய்!
கண்ணுக்குள்ளே பார்க்கையிலே கண்மணியாய் நீயிருப்பாய்!
விண்ணையெட்டிப் பார்க்கையிலே வெண்ணிலவாய் நீயிருப்பாய்!

சொல்லுகின்ற சொல்லுக்குள்ளே செம்பொருளாய் நீயிருப்பாய்!
கல்லுக்குள்ளே ஈரமென கண்மணியே நீயிருப்பாய்!
புல்லுக்குள்ளும் பூவுக்குள்ளும் பூவிழியே நீயிருப்பாய்!
முள்நடுவே மலரெனவே மனசுக்குள் நீயிருப்பாய்!

செய்யுகின்ற செயலிலெல்லாம் சக்திவடி வாயிருப்பாய்!
பெய்யுகின்ற மழை முகிலில் பேரருளாய் நீயிருப்பாய்!
உள்ளங்கையில் ரேகையைப்போல் உள்ளத்திலே நீயிருப்பாய்!
வெள்ளமெனப் பொழியும் அன்பில் வேதனைகள் தீர்த்திருப்பாய்!!

--கவிநயா 

5 comments:

  1. // முள்நடுவே மலரெனவே மனசுக்குள் நீயிருப்பாய்!//

    மிகவும் அழகான, கவி நயமான வரி இதுவே.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. நன்றி தாத்தா! என் மனசுக்குள்ளயும் இருக்காளே. அப்பேர்ப்பட்ட அவளுடைய அன்பை என்னென்பது! அதுக்குத்தான் அப்படிச் சொன்னேன் :)

    பொருத்தமான ராகத்தில் சுகமாக அமைத்துத் தந்தமைக்கு, மீண்டும் நன்றிகள் பல, தாத்தா!

    ReplyDelete
  3. sweeeet ammaa paattu; tried to sing with subbusir and thoroughly enjoyed singing ;thanks both!!

    ReplyDelete
  4. sweeeet ammaa paattu; tried to sing with subbusir and thoroughly enjoyed singing ;thanks both!!

    ReplyDelete
  5. நன்றி லலிதாம்மா! அப்படியே பாடியதை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?

    ReplyDelete