Monday, June 4, 2012

வேண்டும்!





சுப்பு தாத்தா பாடித் தந்தது இங்கே... நன்றி தாத்தா!


நினைந்து நினைந்து ருகும்
மனமொன்று வேண்டும்
கசிந்து கசிந்து கண்ணீர்
பெருகிடல் வேண்டும்
பணிந்து பணிந்து உன்னை
வணங்கிடல் வேண்டும்
கனிந்து கனிந்துன் அன்பில்
கரைந்திட வேண்டும்

மகிழ்ந்து மகிழ்ந்து உன்னை
            புகழ்ந்திடல் வேண்டும்
நெகிழ்ந்துன் நினைவில் நெஞ்சம்
            ஆழ்ந்திடல் வேண்டும்
விழைந்து விழைந்துன் பதம்
            வீழ்ந்திடல் வேண்டும்
குழைந்து குழைந்துன் அன்பில்
            கனிந்திடல் வேண்டும்

அலைந்து திரியும் மனம்
            அடங்கிட வேண்டும்
தொலைந்த குழந்தை உள்ளம்
            திரும்பிட வேண்டும்
கலைந்த கனவு மீண்டும்
            மலர்ந்திடல் வேண்டும்
மலர்ந்து மலர்ந்துன் அன்பில்
            கலந்திடல் வேண்டும்!


--கவிநயா

5 comments:

  1. குழைந்து குழைந்துன் அன்பில்
    கனிந்திடல் வேண்டும்

    வேண்டும் வேண்டும் என்று மனம் நிறைந்த சிறப்பான பாடல் பகிர்வு.. பாராட்டத்தான் வேண்டும் !

    ReplyDelete
  2. my most favourite line:

    "தொலைந்த குழந்தை உள்ளம்
    திரும்பிட வேண்டும்"

    ReplyDelete
  3. my most favourite line:

    "தொலைந்த குழந்தை உள்ளம்
    திரும்பிட வேண்டும்"

    ReplyDelete
  4. //வேண்டும் வேண்டும் என்று மனம் நிறைந்த சிறப்பான பாடல் பகிர்வு.. பாராட்டத்தான் வேண்டும் !//

    நன்றி, இராஜராஜேஸ்வரி அம்மா!

    ReplyDelete
  5. //my most favourite line:

    "தொலைந்த குழந்தை உள்ளம்
    திரும்பிட வேண்டும்"//

    எனக்கும் :) நன்றி, லலிதாம்மா!

    ReplyDelete