சுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி இருக்கார்!
சங்காரபரணம் - இங்கே
ஆனந்த பைரவி - இங்கே
மிக்க நன்றி தாத்தா!! உங்களுக்கு எது பிடிக்குது?
சோகமெல்லாம்
தீர்ப்பவளே சொக்கன் நாயகி – உன்னை
சொந்தமென்று
கொண்ட பின்னே சொர்க்கம் ஏனடி?
மோகமெல்லாம்
தீர்ப்பவளே மோக நாசினி – என்றன்
மோகம்நீயாய்
ஆனபின்னே சோகம் ஏதடி?
பற்றுமிகக்
கொண்டுவிட்டேன் உன்னிடத்திலே – உன்றன்
பாதம்பற்றிக்
கொண்டுவிட்டேன் இருகரத்திலே
சற்றுநீயும்
பார்த்து விட்டால் உன்பயத்திலே - எமைச்
சுற்றும்வினை
விலகுமடி ஒருகணத்திலே!
கடம்பவன
வாசினியே காத்திட வேணும் – உன்னை
காலமெல்லாம்
நேசிக்ககண் பார்த்திட வேணும்
தொடங்கிவிட்ட
வேகமென்றும் தொடர்ந்திட வேணும் - அதற்கு
தேவதையே
நீதானே அருளிட வேணும்!
--கவிநயா
No comments:
Post a Comment