Thursday, June 28, 2012

அகல் ஒளிதீபமாகுமா ?

அகல் ஒளிதீபமாகுமா ?
(சர்வம் நீயே வலையில் உள்ள என் பாடலை இங்கு அளிக்கிறேன)


அகமெனும் அகலிலே எண்ணமெனும் எண்ணையில்


பக்தித்திரி தோய்த்து இட்டேன் ;


அகலுக்கு ஒளி சேர்க்க அன்னையே! உன்னிடம்


அறிவுத்தீ வேண்டி நின்றேன்;


வேண்டியதை வழங்கிட ஞானத்தீயாக நீ


திரியினை நெருங்கி நின்றாய்;


தீ தீண்டினுந்திரி பற்றாத காரணம்


புரியாது புலம்பலானேன்;


பூரண முயற்சியுடன் ஆராய்ந்தபின் அதன்


காரணம் கண்டுகொண்டேன்!






கலியுகக் கடையிலே மலிவாய்க் கிடைத்திடும்


கலப்பட எண்ணை இது!


'நான்'',"எனது" என்றெந்தன் அஹங்காரத்தால் வந்த


அஞ்ஞான அழுக்குகளும் ,


' ஏன்?'என்ற ஆராய்ச்சியானபின் எஞ்சிய


விஞ்ஞான விட்டைகளும்,


கலந்து கெடுத்துவிட்ட கண்ணராவி எண்ணையிதில்


திரியினைத் தோய்த்து இட்டால்,


தீயாய் நீ திரியருகில் வரினும் என் உள்ளகல்


ஒளிதீபமாவதேது?






'நான்' செத்து 'ஏன்?'போன பின்னரே இவ்வகல்


ஒளிருமென்றுணர்ந்தேன் தாயே!



2 comments:

  1. அம்மா, அவள் அருகில் வந்து விட்டால் எல்லா இருளும் ஒரு நொடியில் அகன்று விடுமே.

    ReplyDelete
  2. அவளது மெய்ஞான ஒளியை "நான்","ஏன்?"போன்றவைகள் இருட்டடிப்பு


    செய்யறதே:-((




    இது நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!

    ஆனால் நான் இன்னமும் அந்த நிலை விட்டு முன்னேறாததால்
    இந்த வரிகள் இன்றும் எனக்குப் பொருத்தம் !

    ReplyDelete