Monday, September 10, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 7




சுப்பு தாத்தா பந்துவராளியில் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி
சோக விநாஷினி ரத்னமயே
மணிமய பூஷித கர்ண விபூஷண
ஷாந்திஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
வித்யாலக்ஷ்மி சதா பாலயமாம்
.

தேவர்கள் வணங்கிடும் தேவியளே
            பிருகுவின் புதல்வியே பாரதியே
சோகங்கள் யாவும் தீர்ப்பவளே
எழில் இரத்தி னம்போல ஒளிர்பவளே
செவிகளில் தாடங்கம் விளங்கிடவே
            பொன்னா பரணங்கள் ஒளிர்ந்திடவே
சாந்தியின் இருப்பிட மானவளே
            மலர்ப் புன்னகை வதனம் கொண்டவளே
நவ நிதிகளையும் அளிப்பவளே
            கொடும் கலியிடமிருந்து காப்பவளே
கரங்களில் அபய வரதங்கள் தாங்கி
            விரும்பிய யாவும் தருபவளே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை வித்யா லக்ஷ்மியே காத்தருள்வாய்!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html

2 comments:

  1. கவிநயா,

    ஹஸ்த=கரம்

    11 வது வரியில் சின்ன மாற்றம் செய்தால் இன்னும் ரொம்ப அழகா இருக்கும்;

    இதுவரை ஒருவரிவிடாமல் வாசித்து ரசித்தேன்.

    தான்யலக்ஷ்மியையும்(2)கஜலக்ஷ்மியையும்(4) சுப்புசார் பாடினா

    இன்னும் திருப்தியா இருக்கும்;7&8 பாடுவார்னு நம்புகிறேன்

    ReplyDelete
  2. மிக அருமையான சந்தமும், சொல்லாட்சியும் மிளிர்கிறது. 'அபய' என்னும் சொல் சந்தத்துக்காக சேர்த்ததென நினைக்கிறேன். அன்னையருள் அருகிலிருக்கும்.

    கோரிய வரங்களை விரும்பிய வண்ணம்
    அருளிடும் திருக்கர முடையவளே

    ReplyDelete