Monday, September 3, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 6




சுப்பு தாத்தா அடானா ராகத்தில் பாடியதை இங்கே கேட்கலாம்! மிக்க நன்றி தாத்தா!



ஜெய கமலாசனி ஸத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்யனுதே
கனகதா ராஸ்துதி வைபவ வந்தித
ஷங்கர தேசிக மான்யபதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
விஜயலக்ஷ்மி சதா பாலயமாம்
.

இதயமாம் கமலத்தில் வசிப்பவளே   
            மேல் உலகத்தில் சத்கதி அளிப்பவளே
நாதத்தின் வடிவாய் இருப்பவளே
            அஞ் ஞானத்தை நீக்கி அருள்பவளே
அனுதினம் அர்ச்சிக்கும் குங்குமத்தாலே
            அழகுடன் சிவந்து திகழ்பவளே
மங்கள வாத்யங்கள் மந்திரமுடனே
            பூசைகள் ஏற்று மகிழ்பவளே
கனகதாரா என்னும் துதியினில் மகிழ்ந்து
            கனக மழை பொழிந்த கண்மணியே
சங்கரர் தேசிகன் தோத்திரங்களிலே
            மனங் குளிர்ந்த ருளிய மாதவியே
மதுசூதனனின் காதலியே
என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே
 அன்புடன் உன்னடி பணிகின்றோம்
            எமை விஜய லக்ஷ்மியே காத்தருள்வாய்! 


--கவிநயா 

படத்துக்கு நன்றி: http://www.astromandir.com/mahalakshmiyagya.html


3 comments:

  1. மீண்டுமொரு இனிய விளக்கம்!

    //கனகதாரா என்னும் துதியினில் மகிழ்ந்து
    கனக மழை பொழிந்த கண்மணியே//

    என்னும் சொற்றொடரை

    நெல்லிக் கனிக்காய்த் தங்க மாரியைப்
    பொழிந்திட்ட நிகழ்வைப் போற்றித் துதித்த

    எனப் பாடினால் பொருள் மேலும் சிறக்குமெனக் கருதுகிறேன்.

    ReplyDelete
  2. Nalla Molimaarram!Alagaai irukkirathu.
    Natarajan.

    ReplyDelete