எவ்வடிவில் வருவாய்?
(subbu sir sings:
http://www.youtube.com/watch?v=IxGrqWMES_0&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1&feature=plcp )
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?-கண்டதும்
எப்படியுனை அழைப்பேனோ?-அங்கயற்கண்ணி!
சேய்வடிவில் நீ வந்தால்,பாய்ந்துனை அள்ளியெடுத்து,
உச்சிதனைமுகர்ந்து முத்தங்கள் பதிப்பேனோ?
காணாமல்போன சேயைக் கண்டுவிட்ட தாய்போலே,
ஆனந்த அதிர்ச்சியிலே தூணாய் உறைவேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?
கொஞ்சும் பைங்கிளிக்குஞ்சே!அமிழ்தூறும் நிலாப்பிஞ்சே!
தேன்சிந்தும் பூங்கொத்தே!பாண்டிநாட்டு ஆணிமுத்தே!
மழலையமுதம் சிந்தும் கதம்பவனக்குயிலே!
தவழுமிளந்தென்றலே!என்றழைத்து அணைப்பேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?
கன்னிவடிவில் கண்டால்,பொன்முகத்தில் பொட்டிட்டு,
பின்னிப்பூச்சூட்டிக் கன்னம் வழித்துச்சொடுக்குவேனோ?
அண்டசராசரங்களை நீ அங்கையால் அம்மானை
ஆடக்கண்டு திறந்தவாய் மூடவும் மறப்பேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?
கண்மணியே!தேன்கனியே!தமிழ்மன்னன் தவமணியே!
மண்ணில் விளையாடவந்த வானவில்லே!வண்ணமயிலே!
பட்டுச்சிறகடித்துப் பறந்துவரும் தேன் சிட்டே!
பூமிவந்த தேவதையே! என்றழைத்து அணைப்பேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?
மணமகளாய்க் கண்டால் மலர்க்கரந்தனைப் பற்றி
மணமேடைக் கூட்டிச்செல்லும் சகியாகி மகிழ்வேனோ?
ரங்கன் உன்பூங்கரத்தை,சங்கரன் கைச்சேர்த்து
கன்னிகாதானம் செய்யக் கண்டுள்ளம் குளிர்வேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?
மங்கள மேளங்கொட்ட,சொக்கன் என் மீனாளுக்கு
மங்கலநாண் முடிக்கக் கண்டுகண் பனிப்பேனோ ?
புதுமணத்தம்பதியின் புனித தரிசனத்தில்
எனைமறந்தானந்த வெள்ளத்தில் திளைப்பேனோ?
எவ்வடிவிலுனைக் காண்பேனோ?-கண்டதும்
எப்படியுனை அழைப்பேனோ?-அங்கயற்கண்ணி!
இப்படியே கற்பனையில் என்காலம் முடிந்திடுமோ?
கற்பகமே !அற்பனுக்குன் திருக்காட்சி கிடைத்திடுமோ?
அம்பாளை,குழந்தையாய், பாலாவாக,கன்னியாக, குமரியாக, மங்கையாக வழிபடும் நாள் நெருங்கிவிட்டது நவராத்திரியாக!!
ReplyDeleteபொய் சொல்ல முடியாது அம்மா. இந்தப் பாடலைப் படிக்கும் போது அவ்ளோ பொறாமையா இருக்கு. ஸாரி அம்மா.
ReplyDeleteநல்ல பகிர்வு...
ReplyDeleteஇணைப்பில் பார்க்கிறேன்....
நன்றி...
சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா!
ReplyDeletechandravamsam ,
ReplyDeletekavinaya,
dhanabaalan,
thanks fr feedback