Monday, October 15, 2012

துர்க்கை என்னும் நாமம்!

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா ஆனந்த பைரவி ராகத்தில் ஆனந்தமாகப் பாடித் தந்ததை ஆனந்தமாகக் கேட்டு மகிழுங்கள்! :) மிக்க நன்றி தாத்தா!


துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் துன்பம் மிரண்டு போகுமே!
நற்சொல்லாகி நாவில் நின்று நாளும் நம்மைக் காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தீமை ஓடிப் போகுமே!
நற்பலன்கள் நம்மைத் தேடி வந்து நன்மை சேர்க்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் அச்சம் அச்சம் கொள்ளுமே!
நற்றுணையாய் நிமிடந் தோறும் கூட நின்று காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் சஞ்சலங்கள் விலகுமே!
சத்தியத்தைக் காட்டி நம்மின் சோதனைகள் தீர்க்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் வினைகள் யாவும் தீருமே!
வித்தை போல நல்லவற்றைத் தந்து நம்மைக் காக்குமே!

துர்க்கை என்னும் பேரைச் சொன்னால் தோல்வி தோற்றுப் போகுமே!
நிற்க என்று சொல்லி வெற்றி நம்மை வந்து பற்றுமே!

துர்க்கை என்னும் நாமம் சொன்னால் அமைதி நெஞ்சில் கூடுமே!
ஆனந்தமே ஆனந்தமாய் நம்மை வந்து சேருமே!

கற்க என்று காலன் வந்து பாடம் சொல்லும் முன்னமே
துர்க்கை நாமம் நெஞ்சில் வைக்க என்றும் நன்மை நன்மையே!


-கவிநயா

4 comments:

  1. துர்க்கைத்தாயின் தூய நாமம் பக்தியாய் நவின்றிடில்

    சொர்க்கந்தானே வாழ்வில் என்றும்!துக்கம் என்பதில்லையே !

    ReplyDelete
  2. நவராத்திரி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. subbusir's paattu pramaadham;thanks both

    ReplyDelete
  4. பாடலும் அருமை. சுப்பு ரத்தினம் சார் பாடியிருப்பது அருமை. அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!

    ReplyDelete