Monday, October 22, 2012

சகலகலாவல்லியே...!



தர்பாரி கானடா ராகத்தில் சுப்பு தாத்தா அமைத்துத் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
 

சகலகலா வல்லியே – உனைப் பாட
தீந்தமிழ் வரும் துள்ளியே
(சகலகலா)

பண்ணிசை உனைப் பாட
எண்திசை உனை வாழ்த்த
கண்மிசை நீர் பெருக
என்திசை நீ பார்க்க
(சகலகலா)

ஒவ்வொரு கலையிலும் உள்ளொளிர்ந்திருப்பாய்
வேதத்தின் நாதமாய் நீ ஒலித்திருப்பாய்
நான்முகன் நாவினில் நீ குடியிருப்பாய்
நற்றமிழ் நான்பாட அகம்மகிழ்ந்திருப்பாய்
(சகலகலா)

--கவிநயா

நன்றி: வல்லமை 
 

2 comments:

  1. வாழ்த்துக்கள்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
  2. அழகான பாடல் வரிகளின் ஒவ்வொரு வார்த்தையையும் அனுபவித்து சுப்புசார் பாடியிருக்கும் விதம் ரொம்ப அருமை!

    "பால் மணம் மாறாத" என்ற வர்ணனைக்குப் பொருத்தமாக காணும்
    அந்த (முருகன்?)பாலகன் யார்?

    ReplyDelete