Monday, October 1, 2012

மனமே மனமே மயங்காதே!






சுப்பு தாத்தா அடானாவில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!

 
மனமே மனமே மயங்காதே
அன்னை அருகிருக்கையில் கலங்காதே

விழியோரம் அன்பு கனிந்திருக்கும் – அவள்
இதழோரம் நகை மலர்ந்திருக்கும்
பூந்தளிர் பாதங்கள் நிழல் கொடுக்கும் – அவள்
காந்தள் விரல்விழி நீர் துடைக்கும்

நினைந்து நினைந்தவளைத் துதித்து வந்தால்
துயரங்கள் உனக்கு விடை கொடுக்கும்
கனிந்து கனிந்து பெயர் சொல்லி வந்தால் – அவள்
மடியினில் உனக்கொரு இடம் கிடைக்கும்!


--கவிநயா


4 comments:

  1. சிறப்பான வரிகள்... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. "கனிந்து கனிந்து பெயர் சொல்லி வந்தால் – அவள்

    மடியினில் உனக்கொரு இடம் கிடைக்கும்!"

    நிம்மதியா இருக்கு கவிநயா!

    ReplyDelete
  3. அவள்
    காந்தள் விரல்விழி நீர் துடைக்கும்

    கவிமயமான வரிகள் இதுவல்லவோ!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன், லலிதாம்மா, மற்றும் திவாகர் ஜி.

    ReplyDelete