சுப்பு தாத்தா ஆரபியில் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
உன்னடிகள் பற்றிக் கொள்ள
உன்நினைவே நெஞ்சை அள்ள
கள்ளமில்லா உள்ளம் நிறைய
வெள்ளமென அன்பைப் பொழிய
அருள்வாயோ அம்மா நீயும்
மறுகாதுன் அன்பில் தோயும்
சுகந்தன்னைத் தாராயம்மா
மகளென்னைப் பாராயம்மா!
கறுப்பெல்லாம் வெளுப்பாய் மாற
இருளில்லா ஒளியில் தோய
வெறுப்பேதும் இல்லா வாழ்வில்
விருப்பெல்லாம் நீயே யாக
அருள்வாயோ அம்மா நீயும்
மறுகாதுன் அன்பில் தோயும்
சுகந்தன்னைத் தாராயம்மா
மகளென்னைப் பாராயம்மா!
--கவிநயா
உங்க பாட்டை எங்க ஊட்டுக்காரரு ஆரபி ராகத்துலே பாட ராரு.
ReplyDeleteகேளுங்க...
அது சரி, இந்த ள, ழ, ல, ற, ர இல்லாம ஒரு பாட்டு எழுதுங்களேன்.
இங்ஙன பாருங்க...ஊட்டுக்காரரு எவ்வளவு கஷ்டப்படராரு.
மீனாட்சி பாட்டி.
ஏன் பாட்டி அப்படிச் சொல்றீங்க?
ReplyDeleteஇது பாட்டு மாதிரியே இல்லையே, சுப்பு தாத்தா எப்படிப் பாடப் போறாரோன்னு நினைச்சேன், ஆனா எப்படியும் அழகா பாடிடுவார்னும் நினைச்சேன். அதன்படியே ஆரபியில் அழகாகப் பாடிட்டார் :) மிக்க நன்றி தாத்தா!
உன் பாட்டு வரிகளையும் சுப்புசாரின் பாட்டையும் ரசித்தேன் ;மீனா மாமியின் பின்னூட்டத்தையும் ரசித்து :-))
ReplyDeleteஅருமை... ரசித்தேன்...(கருத்துக்களும்)
ReplyDeleteமிகவும் நன்றி லலிதாம்மா மற்றும் தனபாலன் :)
ReplyDelete