Monday, November 12, 2012

தீபம் நீயே!

அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!




சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் ஆனந்தமாகப் பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
 

தீபம் ஆகி எங்கள் நெஞ்சில் திகழ்ந்திடுவாய் அம்மே!
தாபம் நீக்கி தாயாய் எங்களைத் தேற்றிடுவாய் அம்மே!
கோபம் இன்றிக் குழந்தையாகக் குழைந்திடுவாய் அம்மே!
பாபம் போக்கி பதங்களில் எம்மைச் சேர்த்துக்கொள்வாய் அம்மே!

தீபம் ஆகி எம் இல்லங்களில் திகழ்ந்திடுவாய் அம்மே!
தீய இருளை விரட்டி நல்லொளி தந்திடுவாய் அம்மே!
தீயாய் வந்து தீமை யாவும் பொசுக்கிடுவாய் அம்மே!
தீண்டும் துன்பம் எல்லாம் நீக்கி சுகந்தருவாய் அம்மே!

தீபம் ஆகி உலகெங்கிலும் ஒளி யூட்டிடுவாய் அம்மே!
நீபம் அடர்ந்த வனத்தி னுள்ளே குடியிருக்கும் அம்மே!
இடபம் ஏறி பதியுட னிங்கே வந்திடுவாய் அம்மே!
இன்பம் எல்லாம் நீயேயாக அருளிடுவாய் அம்மே!


--கவிநயா

5 comments:

  1. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தீபம் ஆகி எங்கள் நெஞ்சில் திகழ்ந்திடுவாய் அம்மே!
    தாபம் நீக்கி தாயாய் எங்களைத் தேற்றிடுவாய் அம்மே!

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆனந்தமாகப்பாடியிருக்கிறார் சுப்பு தாத்தா என்று எழுதியிருப்பது
    எத்துணை உண்மை !!

    இந்தப்பாட்டை ஒரு எழுபது தரம் பாடியிருப்பேன்.
    ஆனந்தம் என்பது ஒரு உள் நிகழ்வு.
    அன்னையின் அருள் பெற்றவருக்கே
    அது சாத்தியம்.

    அந்த ஆனந்தம்
    அந்த அன்னையின் சான்னித்யம்
    அனந்தம்.
    அந்த அனந்தத்தில்
    மிதந்துவிடு . தன்னை
    மறந்துவிடு எனச்
    சொல்லாமற்சொல்லும்
    சுந்தரக்கவிதை இது.

    கவி நயா ஒரு
    காளமேகம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  4. மிக்க நன்றி தனபாலன், லலிதாம்மா!

    ReplyDelete
  5. //இந்தப்பாட்டை ஒரு எழுபது தரம் பாடியிருப்பேன்.//

    வாவ் தாத்தா! எழுபது தரமா! பாட்டி ஒண்ணும் சொல்லலையா? :)

    //ஆனந்தம் என்பது ஒரு உள் நிகழ்வு.
    அன்னையின் அருள் பெற்றவருக்கே
    அது சாத்தியம்.//

    ஆனந்தத்தை நீங்கள் அனுபவித்ததறிந்து எனக்கு ஆனந்தம்!

    //கவி நயா ஒரு
    காளமேகம்.//

    அடேயப்பா. போட்டீங்களே ஒரு போடு. உங்க அன்பான வார்த்தைகளை ஆசிகளா எடுத்துக்கறேன் தாத்தா. ஆனா எழுதணும்னு ஆசை இருந்தாலும் அவ மனசு வைக்கலைன்னா வார்த்தையே வராது. அதனால, அவளேதான் காளமேகம், கார்மேகம், எல்லாம்.

    அன்புக்கு மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete