பச்சை வண்ணப் பைங்கிளியே – மனக்
கச்சைக்குள் உனை வைத்தேனே!
(பச்சை)
திக்கு விஜயம் செய்தவளே – என்
திக்கில் விஜயம் செய்யாயோ?
சொக்கன் பக்கம் அமர்ந்தவளே –
என்
பக்கம் கொஞ்சம் வாராயோ?
(பச்சை)
மதுராபுரியை ஆள்பவளே - என்
மனமாபுரியை ஆளாயோ?
கனிவாய்ச் சுந்தர(ர்) மொழியாளே
– எனைக்
கனிவாய்க் கொஞ்சம் பாராயோ?
(பச்சை)
--கவிநயா
அழகு... ரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteசொக்கன்பக்கம் அமர்ந்தாலே
ReplyDeleteஅக்கம்பக்கம் தெரியாது
சொக்கன்மூலம் சொல்லினால்
அக்கம்பக்கம் பார்ப்பாளோ
வாசித்தமைக்கு நன்றி தனபாலன், மற்றும் திவாகர் ஜி!
ReplyDelete