Monday, November 19, 2012

தாயே!





சுப்பு தாத்தா மிக இனிமையாகப் பாடித் தந்ததை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


சின்ன இதழ்களில் மின்னல் போலவே
தோணுதடி புன் சிரிப்பு
வண்ண மலரொன்று பூத்தது போலவே
தோணுதடி உன் சிரிப்பு!

விண்ணவரைக் காக்க கண்ணெனவே பேண
செந்நெருப்பில் பிறந் தாயே
பண்டாசுரன் வதம் செய்த பின்னே நீயும்
பங்கயம்போல் மலர்ந் தாயே!

கண்ணனுக்குத் தங்கை கந்தனுக்கு அன்னை
எங்களுக்கும் தாய் நீயே
கண்ணுக்குள்ளே வந்து நெஞ்சுக்குள்ளே நின்று
காவல்தந்து காப் பாயே!

மண்ணுலகைக் காக்க மாந்தர் தமைப் பேண
அன்னையென வந் தாயே
பண்ணெடுத்துப் பாட அன்னை உன்னைப் போற்ற
பைந்தமிழைத் தந் தாயே!


--கவிநயா

2 comments:

  1. தாயே சரணம்...

    நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "கண்ணனுக்குத் தங்கை கந்தனுக்கு அன்னை
    எங்களுக்கும் தாய் நீயே!"

    என்குரல் உனக்குக் கேட்கலையோ?அம்ம்ம்மா:(
    நானும் உந்தன் சேயே.

    ReplyDelete