சுப்பு தாத்தா தேஷ் ராகத்தில் கிளியோசைகளுடன் பாடி அசத்தி இருக்கிறார். கேட்டு மகிழுங்கள். மிக்க நன்றி தாத்தா!
ஓய்வே இல்லாமல் ஒசிந்து நிற்பவளே
ஓய்வே இல்லாமல் ஒசிந்து நிற்பவளே
பாயும் புனலானைப் பக்கம் கொண்டவளே
யாரை எதிர்பார்த்துக் காத்துக்
கிடக்கிறியோ
ஊரே உனைப் பார்க்க ஓடி வருகையிலே…
காலும் வலிக்கலையோ கருவிழியும்
சோரலையோ?
மேலும் வலிக்கலையோ மெல்லிடையும்
நோகலையோ?
மனசுக்குள் இடமிருக்கு மங்கையுன்னை
போற்றி வைக்க!
தமிழுக்குள் இசையிருக்கு மெட்டுக்கட்டி
பாட்டெடுக்க!
கொஞ்சும் கிளியாளே கொஞ்சம் வரவேணும்
நெஞ்சம் அமர வேணும் கொஞ்சம்இளைப் பாற
வேணும்!
--கவிநயா
superb:)
ReplyDeleteromba nalla karuthu!
ReplyDeleteNatarajan.