சுப்பு தாத்தா மோஹன ராகத்தில் பாடியது இங்கே. கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
கண்ணீரை ஏன் தந்தாயோ?
கவிதை பெறவே தந்தாயோ?
கண்ணீரின்றிக் கவிதை புனையும்
காரணம் எனக்குத் தாராயோ?
கண்ணீர் இன்னும் வற்றவில்லை
அதனால் என்ன குற்றமில்லை
பெற்றவள் உன்றன் துணை யிருக்க
விட்டொழித்தேன் என் மனக்கவலை!
பன்னீர் போலே உன் சிரிப்பு
பனியைப் போலுன் அருள் எனக்கு
வினையின் தகிப்பைத் தணித்திடுமே
சுனையைப் போலது சுகந் தருமே!
உனக்காய் மட்டும் அழ வேணும்
உன் பாதங்களில் விழ வேணும்
கண்ணீர் அதற்காய் சேமிக்க
காமாக்ஷி உனதருள் வேணும்!
--கவிநயா
காமாக்ஷி உனதருள் வேணும்!
ReplyDeleteகண்ணீரை மாற்ற கண்டிப்பாய் காமாட்ச்யின் கண்ணருள் கிடைக்கும் ..!
Kavithaiyai Paarththu kalakkam adainthen.Ambaal arulaal kanner poi magilchi kidaikkum nichchayam!
ReplyDeleteNatarajan.
நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா, மற்றும் திரு.நடராஜன் :)
ReplyDelete