Monday, February 18, 2013

சொல்லு கிளியே... சொல்லு!



சுப்பு தாத்தா ஹிந்தோளம் ராகத்தில் அனுபவித்துப் பாடித் தந்ததைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



பச்சை நிறமவள் தந்ததோ
இச்சைக் கிளியே நீ சொல்லு…
செவ்விதழ் முத்தத்தில் சிவந்ததோ
கொவ்வைக் கனிவாய் நீ சொல்லு!

(பச்சை)

பறந்து பறந்து திரியும் போது
பாதை மறந்தையோ,
நீயும் பாதை மறந்தையோ?

தத்தித் தத்தித் தவழ்ந்து வந்து
தோளில் அமர்ந்தையோ,
அவள் தோளில் அமர்ந்தையோ?

(பச்சை)

பாவம் என்று பரிந்து அன்னை
அனுமதித் தாளோ,
உன்னை அனுமதித் தாளோ?

பச்சை வண்ணப் பைங்கிளி யவள்
அரவணைத் தாளோ,
தோளில் அமர வைத்தாளோ?

(பச்சை)

சின்னக் கிளியே வண்ணக் கிளியே
தூது செல்வாயோ,
அன்னைக்கொரு சேதி சொல்வாயோ?

பாதை தேடி அலையும் பிள்ளையைப்
பார்க்கச் சொல்வாயோ,
பாதம் சேர்க்கச் சொல்வாயோ?

(பச்சை)


--கவிநயா

15 comments:

  1. மிக அருமையான கவிதை.

    ReplyDelete
  2. ரசிக்க வைக்கும் அழகான வரிகள்....

    ReplyDelete
  3. ரசித்தமைக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி ஜனா!

    ReplyDelete
  4. தவறாத வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  5. நானும் :
    "பாதை தேடி அலையும்பிள்ளையைப்
    பார்க்கச் சொல்வாயோ,
    பாதம் சேர்க்கச் சொல்வாயோ?"


    ReplyDelete
  6. எனக்கு பிடித்தமாதிரி எனக்கு பிடித்த வரி!

    பாதை தேடி அலையும் என்னையும்
    பார்க்கச் சொல்வாயோ,
    அன்னையின் பாதத்தில் சேர்க்கச் சொல்வாயோ?

    ReplyDelete
  7. லலிதாம்மா, ஷைலன்:

    எல்லாருக்கும் பொதுவா இருக்கணும்னுதானே 'பிள்ளையை'ன்னு சொன்னேன்; இல்லன்னா 'என்னை'ன்னு சொல்லியிருப்பேனே! :) வெவ்வெவ்வே!



    ச்ச்சும்மா சொன்னேன். என்னை மாதிரியே இருக்கிறவங்களைப் பார்க்கும்போது சந்தோஷம்தான் :) வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  8. எனக்கு எல்லாம் நீங்கமாதிரி பரந்த மனசு கிடையாது. வைத்திருக்க விருப்பமும் இல்லை.
    எங்கம்மா மொத்தமும் எனக்குதான்.

    ReplyDelete
  9. அடப் பாவி! அப்படின்னா சரி... நானும் உண்மையை ஒத்துக்கறேன் :) எனக்கே எனக்குத்தான் என்ன்ன்ன்ன்னோட ச்ச்செல்ல்ல்ல அம்மா!

    ReplyDelete
  10. ஷைலன். எனக்கு ஒரு சந்தேகம்... உங்க மேலதான்! இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க?

    ReplyDelete

  11. 1)கவிநயா,
    2)ஷைலன் ,

    நான் அப்ளிகேஷன் போனவருடமே அனுப்பியாச்சு!
    (2-2-12)அன்றுபோஸ்ட்பண்ணியிருக்கும்
    என் பதிவின் (தாயே!நான் உன் சேய்!)கடைசிபதத்தைப்படிக்கவும்;
    நான்தான் க்யூவில் பர்ஸ்ட் ;
    அவள்எனக்கேஎனக்குத்தான்.
    ரெண்டுபேரும் சண்டைபோட்டு மண்டை உடைச்சிக்க வேண்டாம்.

    இது எப்டி இருக்கு?:)

    சுப்புசாரின் பாட்டைக் கேட்டு ரசித்தேன் .நன்றி கவிநயாவுக்கும் சுப்புசாருக்கும்!!

    ReplyDelete
  12. இது நல்லாவே இல்லை அம்மா :) அப்படிப் பார்த்தா நானும் எப்பவோ...

    ம்... வேண்டாம். அப்புறம் சண்டை வளர்ந்துகிட்டே போகும், அதனால நானே ஸ்டாப் பண்ணிக்கிறேன். உங்களுக்காகல்லாம் இல்லை, அம்மா பாவம்ல, அவளுக்காக! :)

    ReplyDelete
  13. கவிநயக்கா அதை ஏன் அழுதுகிட்டே சொல்கிறிங்க.
    OK
    கவிநயக்கா, லலிதாம்மா!
    நானே சந்தோஷமா விட்டு தந்துக்கிறேன் ஒரு நிபந்தனையில்
    இங்கே இருக்கிற ஏன்னோட அம்மா லலிதா திரிபுர சுந்தரி(Click this link) பற்றி ஒரு அழகான கவிதை பாடுங்க. நானே சந்தோஷமா விட்டு தந்துட்டு கடைசியில் நின்றுக்கிறன்.
    கீழே உள்ள conceptஐயும் கவிதையில் புகுத்திடுங்க
    லலிதா ஸகஸ்ர நாமப்படி
    பஞ்ச பிரஹ்மாஸன ஸ்திதா( பிரமம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசன் , ஸதாஸிவன் ஆகிய பஞ்ச மூர்த்திகளை இருக்கைகளாக உள்ளவள்).
    பஞ்ச பிரேதாஸனாஸீனா( பிரமம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசன் , ஸதாஸிவன் ஆகிய பஞ்ச மூர்த்திகள் சக்தியற்றுள்ள நிலையில் பஞ்ச பிரேதம்).
    பஞ்ச பிரஹ்ம ஸ்வரூபிணி( பஞ்ச மூர்த்திகள் வடிவில் உள்ளவள்)
    லக்ஷ்மி, சரஸ்வதி சாமரம் வீசுகிறார்கள்.
    அன்னையின் பாதங்கள்.

    டேக் யுவர் ஓன் டைம் !

    ReplyDelete
  14. ஐய்ய... நான் ஒண்ணும் அழுதுக்கிட்டே சொல்லலையே... சிரிச்சிக்கிட்டேதான் சொன்னேன்! நீங்க சிரிப்பானைப் பார்க்கலையா? :)

    கவிதைதானே... அவள் தர்றதைத்தான் இங்கே தர்றது வழக்கம்... அது போல இதுக்கும் ஏதாச்சும் தருவாளான்னு பார்க்கலாம். நீங்க தந்திருக்கும் சுட்டியில் அம்மா கொள்ளை அழகா இருக்கா! மிக்க நன்றி.

    ReplyDelete
  15. நன்றியக்கா! என்னோட அம்மா எப்பவுமே அழகுதான்!

    ReplyDelete