Monday, February 25, 2013

தாமரைப் பாதத்தில்...



இருமல் விடாது வாட்டிக் கொண்டிருக்கும் போதிலும், அதைப் பொருட்படுத்தாது, சுப்புத் தாத்தா ஆரபி ராகத்தில் அருமையாகப் பாடித் தந்திருக்கிறார். மிக்க நன்றி தாத்தா! அவருக்கு இருமல் விரைவில் குணமாக அருள்வாய் அம்மா! 


தாமரைப் பாதத்தில் தலை வைத்தேன் – சோம 
சேகரன் மனைவியுன்மேல் மனம் பதித்தேன்

(தாமரை)

சாமரம் போல மெல்ல வீசி வந்தாய் – ஒரு
பூமரமாய் மனதில் ஊன்றி நின்றாய்

(தாமரை)

காமனை எரித்தவன் மேல் காதல் கொண்டாய் - அந்த
காமனுக்குக் கருணையினால் உயிரைத் தந்தாய்
பாமரன் என்னையும் பார்த்தருள்வாய் – எழிற்
கோலமர் காமாக்ஷி! காத்தருள்வாய்!

(தாமரை)

--கவிநயா

5 comments:

  1. ஏமநாதனின் செருக்கழித்த ஈசன்

    வாமபாகத்தில் உறைபவளே!-உந்தன்

    நாமமன்றி வேறு துதி அறியேன் -தாயே !

    தாமாதமின்றி நீ தடுத்தாட்கொள் !

    ReplyDelete
  2. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  3. ரொம்ப அழகா எழுதறீங்க லலிதாம்மா.. நன்றி அம்மா.

    ReplyDelete
  4. சுப்புசார்,

    இருமல் இருக்கரப்போ எப்டி இவ்வளவு கணீர்னு பாடமுடிஞ்சிது ?

    இதுவும் அவள் விளையாட்டா?

    ReplyDelete