Friday, March 1, 2013

அம்மா எனும் அதிசயம் !


அம்மா எனும் அதிசயம் !
(subbusir sings:
http://www.youtube.com/watch?v=RFi3rCpPQ60&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )


அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

"ஆயிரம் நாமங்கள்"ஜெபித்ததில்லை-அன்பாய்
"அம்மா!"என்றுதான் உனை அழைத்தேன்-இந்த
மூவெழுத்தை நான் மொழிகையிலே-என் நா
தேவாமிருதமாய் தித்திப்பதென்ன?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

செங்கிருத "எழிலலை"த்துதிபாடி -சிவ
சங்கரி!நானுனைத் தொழுததில்லை-பொங்கும் 
அன்பிலே ''அம்மா!"எனும்போது -செவியில்
இன்பத்தேனாறு பாய்வதென்ன ?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?

தேனிறை வண்ண மண மலர் தூவி -பஞ்ச
பாணி! நானுனைப்  பணிந்ததில்லை -அபி
ராமித்தாயுனை நினைத்ததுமே -நெஞ்சில்
பாமலர் உனக்காகப் பூத்ததென்ன ?

அம்மா...அம்மா ...அம்மா ...இந்த
மூவெழுத்தே திவ்ய ரகசியமோ?-மனித
மூளைக்கு எட்டாத அதிசயமோ?



12 comments:

  1. அம்மா... அம்மா... அம்மா... அவளே அனைத்தும். மிக அருமை அம்மா.

    ReplyDelete
  2. சுப்பு சா ர் ,

    பாட்டைக்கேட்டு கண்ணெல்லாம் பனித்தது

    இதை எப்படி சொல்றதுன்னே புரியலை ,அவளது லீலையில் இதுவும் ஒண்ணு ;அவ்ளோதான் சொல்ல முடியறது;நன்றின்னு சொல்வதெல்லாம்

    போதாது சார் .

    ReplyDelete
  3. kavinaya,
    pl enjoy the song in subbusir's voice

    ReplyDelete
  4. லலிதம்மா
    எப்படிம்மா நினைச்சவுடன் உங்களால் இப்படி கவிதை எழுதமுடிகிறது? ரெம்ப book படிப்பீங்களா? "செங்கிருத எழிலலை" என்றால் என்ன meaning ?

    கவினயாக்கா , லலிதம்மா Just tell me how do you feel below two lines( don't exaggerate)? It's my first poem(If not sentences) I tried after seeing yours.

    அந்த சிவனுக்கும் அன்னை அவள் தான் !
    எனக்கும் அன்னை அவள் தான் !
    அதனால் தானோ என்னவோ சிவோஹம் (என்னுள் சிவம் / நானும் சிவன்தான் )!

    ReplyDelete
  5. //சுப்பு சா ர் ,

    பாட்டைக்கேட்டு கண்ணெல்லாம் பனித்தது
    //

    ஆம் தாத்தா... அற்புதமா இருந்தது. கண்பனித்தது, எனக்கும். கணீர்னு பாடி இருக்கீங்க. மிக்க நன்றி.

    லலிதாம்மா, உண்மையைச் சொன்னா நீங்க எழுதறதைப் பார்க்கும் போது நானெல்லாம் ஏன் எழுதறேன்னுதான் தோணுது. என்ன பண்ணலாம், குழந்தைக் கிறுக்கல் மாதிரி என்னால எழுதாமலும் இருக்க முடியலை :( அருமையா எழுதறீங்க அம்மா.

    உங்களுக்கும் சுப்புதாத்தாவிற்கும் என்னுடைய பணிவன்பான வணக்கங்கள்.


    ReplyDelete


  6. சௌந்தர்ய லஹரி எனபதை எழில் அலை என்று மொழிபெயர்த்து இரண்டையும் கூட்டி
    எழிலலை என்று எழுதியிருப்பார்கள் போலும்.

    எனக்கு ழ ல இரண்டுமே வராது. உண்மையிலே ர, ற, ல, ள, ழ எல்லாமே நான் சரியா உச்சரிக்க வராது.
    புதுசா என்னைக் கேட்கறவங்களுக்கு ஹ சௌன்டு தான் வரும்.

    பழையவங்களுக்கு அது பழக்கப்பட்டு போயிடும்.

    கவி நயாவோட அம்மா நான் எப்படி பாடினாலும் கோவிச்சுக்கமாட்டாங்க அப்படிங்கற தைரியத்துலே
    பாடுறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  7. ஷைலன் ,

    1) தூங்கப்போகுமுன் கொஞ்சநேரம் அமரர் ர.கணபதி எழுதிய "தெய்வத்தின் குரல் "படித்து விடுவேன் .இதுமட்டும்தான் நான்

    ரெகுலராப் படிப்பது ;மற்றபடி நான் அடிக்கடி விரும்பிப் படிப்பது

    பாரதியாரின் பராசக்தி பாடல்கள்; நீ நினைப்பதுபோல் நான்
    avid reader இல்லை

    2)செங்கிருதம்=sanskrit ;எழிலலை=சௌந்தர்யலஹரி

    3)சிவோஹம் என்று உணரும் லெவெலுக்கு வந்துவிட்டால்
    அதற்குமேல் வேறெதுவும் தேவையே இல்லை

    உன்வரிகளின் கருத்து எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு
    மேலும் மேலும் நீ எழுத அருள் புரியும்படி அம்மாவை வேண்டிக்கறேன்

    ReplyDelete
  8. கவிநயா ,

    உன் கவிநயம்மிக்க தமிழ்நடைக்கு நான் விசிறி என்ற ரகசியத்தை இப்போ வெளிப்படையா சொல்லிட்டேன்;கிறுக்கல் என்றெல்லாம் சொல்லி உன்
    fan மனசை வருந்தவைக்காதே!

    ReplyDelete
  9. சுப்புத் தாத்தா, உங்க அன்புக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நீங்க சொன்ன மாதிரி அம்மா கோவிச்சுக்க மாட்டாங்கிற தைரியத்தில்தான் நானுமே எழுதிக்கிட்டிருக்கேன் தாத்தா. அப்படி இருக்கும் போது நீங்க மனமுருகிப் பாடறதுக்குப் போய் எப்படி கோவிச்சுப்பா? :)

    ReplyDelete
  10. ஷைலன்: லலிதாம்மா சரியாச் சொல்லிட்டாங்க பாருங்க. நீங்க நிறைய எழுதறதுக்கு என்னுடைய வாழ்த்துகளும்...

    ReplyDelete
  11. நன்றி அக்கா , நன்றி லலிதம்மா !

    ReplyDelete