Monday, June 3, 2013

அருள் செய்யலாகாதோ?



சுப்பு தாத்தா அமெரிக்காவிலிருந்து...வந்த மறுநாளே பாடித் தந்திருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!



அருள் செய்ய லாகாதோ அம்மா?
நீயே கதியென்று உருவேற்றினேன்
என் உளமார தினம்பாடி உனையேற்றினேன்

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)

மதுரை அரசியவள் வேண்டுதலை மதித்தாய்
கைலாயந் தனை விட்டு பூவுலகில் உதித்தாய்
கிளி யேந்தும் கிளியே நீ செந்நெருப்பில் முகிழ்த்தாய்
கிலி நீக்கி கலி தீர்க்க கருணையால் அவ தரித்தாய்

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)

கூடல் நகரினிலே கூத்தனுடன் ஆட
கொண்டாடும் அடியவர்கள் திருப் பதமே நாட
நாடிடும் அடியவரை நலமுடனே பேண
நானிலம் போற்றும் உன்றன் திருமுகம் நான் காண

(அருள் செய்ய லாகாதோ அம்மா?)


--கவிநயா



4 comments:

  1. அருமை.... அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நாடிடும் அடியவரை நலமுடனே பேண
    நானிலம் போற்றும் உன்றன் திருமுகம் நான் காண

    (அருள் செய்ய லாகாதோ அம்மா?)

    அருமையான பாடல்..
    ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. மிக்க நன்றி தனபாலன், மற்றும் இராஜராஜேஸ்வரி அம்மா!

    ReplyDelete
  4. An opportunity showered by Goddess Amma to sing her praise from the shores of USA

    Thank U Madam Kavinaya.

    subbu thatha.

    ReplyDelete