சுப்பு தாத்தா அடானாவில் பாடி அசத்தியிருப்பது இங்கே...அவர் சேர்த்திருக்கும் அழகிய படங்களையும் கண்டு களியுங்கள். மிக்க நன்றி தாத்தா!
அம்பா ஜகதாம்பா
அம்பலவாணன்இடம் அமர்ந்தருள் புரிகின்ற
(அம்பா ஜகதாம்பா)
அரனுடன் திருநடம் புரிந்திடுவாள்
பரமென்ற பேருக்கு புகல் தருவாள்
(அம்பா ஜகதாம்பா)
தேவரெல்லாம் சூழ
முனிவரெல்லாம் பணிய
பக்தரெல்லாம் கூட
முத்தமிழில் புகழ் பாட...
ஜல் ஜல் ஜல்லென சலங்கைகள் குலுங்கிட
சிவை எழில் நடமிடவே
கல் கல் கல்லென கழல்கள் ஒலித்திட
சிவன் உடன் நடமிடவே
தீம் தீம் தீமென திசைகள் அதிர்ந்திட
இருவரும் நடமிடவே
ஓம் ஓம் ஓமெனும் நாதம் ஒலித்திட
நானிலம் வணங்கிடவே
அம்பா ஜகதம்பா
அரனுடன் திருநடம் புரிந்திடுவாள்
பரமென்ற பேருக்கு புகல் தருவாள்
(அம்பா ஜகதம்பா)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://thirisoolam.blogspot.com/2013/07/14072013.html
அருமையான பாடல்..பராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி அம்மா.
Deleteஅம்மா, உங்கள் தளத்தில் google search சேர்க்க இயலுமா? நீங்கள் முன்பு ஒரு முறை இட்ட ஸ்ரீ புவனேஸ்வரியின் படங்களுடனான பதிவைத் தேடுகிறேன், கிடைக்கவில்லை :(
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteபாடல் ரொம்ப அருமை!!. அதன் த்வனிக்கு ஏற்றபடி, 'அடாணா' வைக் கச்சிதமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சுப்பு தாத்தா. பாடுவதைக் கேட்கும் போதே மனக் கண்முன் அம்மையும் அப்பனும் ஆடுவதை எண்ணிப் பார்க்க முடிகிறது!!. மிக அருமையான படங்கள். மிக அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி பார்வதி. ஆம், வழக்கம் போலவே தாத்தா பொருத்தமாக ராகம் அமைத்திருக்கிறார்.
Deletenalla paattu Kavinaya!!
ReplyDeleteநன்றி திவாகர் ஜி!
Delete