Thursday, October 10, 2013

Morning Raga மீனாட்சி! (மாதே!)

நவராத்திரி:  நேற்று, இளையராஜா-MSV கூட்டுப் பாட்டு பார்த்தோம் - தாய் மூகாம்பிகை படத்தில் இருந்து;
இன்னிக்கு Morning Raga என்ற அழகிய படத்தில், ஒரு மீனாட்சி பாட்டு பார்ப்போமா?

(என்னடா, இந்த ரவி, நவராத்திரி அதுவுமா, அம்பாளுக்குச் சினிமாப் பாட்டா போடுறான்? -ன்னு யாராச்சும் முனகறீங்களா என்ன???:)))


இந்தப் படத்துக்கு இசை = மணி சர்மா;
போக்கிரி, திருப்பாச்சி, ஆஞ்சனேயா, தாஜ் மகால் போன்ற பல விஜய்/ அஜீத் படங்களுக்கு இசையமைத்தவர்!

தாஜ் மகாலில் வரும் "மின்னலைப் பிடித்து, மின்னலைப் பிடித்து" காதல் பாட்டுக்கு, நான் பெரும் அடிமை!:)


மாதே! மலையத் துவஜ பாண்டிய சஞ்சாதே -ன்னு வடமொழிப் பாடல்!
= அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர் எழுதியது!

இதுவொரு பத வர்ணம்!
அப்படின்னா என்ன? -ன்னு லுக்கு விடாதீக:) ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லுறேன்; அறிஞர்கள் வந்து திருத்தவும்!

வழக்கமான கர்நாடக இசைப் பாடல்கள்....
எடுப்பு - தொடுப்பு - முடிப்பு (பல்லவி-அனுபல்லவி-சரணம்) -ன்னு முடிஞ்சீரும்!

ஆனால் பத வர்ணத்தில், வரிகளுக்கு நடுவே, ஜதியும் கலந்து வரும்! (தாம்-தீம்-தொம் etc)
அதனால் பரத நாட்டியத்துக்கு மிகவும் பயன்படுத்துவார்கள்!

Morning Raga படத்தில்... இந்த "சாஸ்த்ரீயமான" பாட்டை...
Drums, Guitar, Violin, மிருதங்கம், கடம், சதங்கை -ன்னு அத்தனைக் கருவிகளும்...
நடுவில் கிராமத்துப் பெண்ணின் சிரிப்பே சங்கீதமாக:))

ஆனால் மேற்கத்தியப் படுத்தாமல், மேன்மைப் படுத்தி உள்ளார்கள்!
So called புனிதம் கெடாமல், இசையைத் துள்ளலாக, கர்நாடக இசை அறியாதவர்க்கும் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்!
கேட்டுப் பாருங்க! உங்களுக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்சிப் போகும்:))

கேட்டுக்கிட்டே பதிவை வாசிங்க!
அப்பறம் முடிஞ்சா Morning Raga முழுப் படமும் பாருங்க!:)


மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே
மாதங்க வதன குக, மாதே!

சாகோதரி சங்கரி சாமுண்டீஸ்வரி
சந்திர கலாதரி தாயே கெளரி
-----------------
தாதா - சகல கலா நிபுண ச-துரா
தாதா - சுலப ஹ்ருதய மதுர வ-சனா
தாதா - சரச ருசிர தர ஸ்வர - லய கீதா 
சுகத - நிஜ பவ ரசிக வர - தாதா

மகிஷா சுர வத நள வதி ஸ்ரீ..
கிருஷ்ண ராஜேந்திர தயே
சதா பொரே மஹித - ஹரி கேச மனோகரே - சதய

(மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே)
-----------------
ஷ்யாமே 
சகல புவன சார்வ பெளமே 
சசி மண்டல மத்யக
(மாதே, மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே)
-----------------

பொருள்:

*மாதே = அம்மா
*மலையத் துவஜ பாண்டிய சம்ஜாதே = மலையத்துவச பாண்டியனின் செல்ல மகளே

*மாதங்க வதன = பச்சை மேனி கொண்டவளே
*குக... மாதே = குகப் பெருமான் / என் முருகனுக்குத் தாயே!

*சாகோதரி = பச்சை மாமலை போல் மேனியான், எந்தை அரங்கனுக்குச் சகோதரியே!

*சங்கரி = சங்கரனின் சங்கரி!

*சாமுண்டீஸ்வரி = சாமுண்டீஸ்வரி தாயே!
*சந்திர கலாதரி = பிறைச் சந்தரனைச் சூடியவளே!
*தாயே கெளரி = அம்மா கெளரி!

அம்மா, மக-மாயி, என் குக-தாயீ
மீனாட்சீ.. ஒன் முருகப் பிள்ளையையே நம்பி வந்தேன்; நின் தாள் சரண்!


வரி: அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர்
ராகம்: கமாஸ்
குரல்: சுதா ரகுநாதன்
இசை: மணி சர்மா
படம்: Morning Raga
---------

*இதே பாடலை MS Amma பாடுறதை, இங்கு கேட்கலாம்!
*வீணை இசையில், இந்தப் பாட்டு, இங்கே!
*நடிகை ஷோபனா, இந்தப் பாட்டுக்கு ஆடும் நடனம் இங்கே!

அனைவருக்கும் இனிய நவராத்திரி (ஒன்பதிரா) வணக்கம்!
முடிந்தால், நாளையும் ஒரு பாடல் இடுகிறேன்
- Amman Songs Head Master கவிநயா அக்கா -ன்னா.. எனக்கு எப்பமே ஒரு பயம்:))

3 comments:

  1. பொருள் விளக்கத்திற்கு நன்றிங்க...

    ReplyDelete
  2. மாதங்கி என்பதற்குக் கரிய நிறம் எனப் பொருள்.

    உமையின் நிறம் கருப்பு. சிவனின் நிறம் சிவப்பு.

    அன்னையின் மூலம் பிறந்த‌தால், கணபதியையும் மாதங்க வதனா ஆனந்த சதனா என அழைப்பார்கள்.

    சிவனின்று தோன்றியதால், முருகனின் நிறமும் செம்மையே!

    ReplyDelete
  3. மிக இனிமையான பாடல். நடன சுட்டியை இனிமேல்தான் பார்க்க வேண்டும். நன்றி கண்ணா.

    //கவிநயா அக்கா -ன்னா.. எனக்கு எப்பமே ஒரு பயம்:)) //

    இருக்கட்டும்... இருக்கட்டும். கொஞ்சூண்டு பயம் இருந்தால்தான் நல்லது! :)

    ReplyDelete