Monday, October 7, 2013
காளி சரணம்!
சுப்பு தாத்தா மோஹனத்தில் அன்பு சொட்டப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா.
கருநீல மேகத்தில் காளியுனைக் கண்டேன்
காட்டாற்று வெள்ளம் போல் உன்கருணை கண்டேன்
வெண்ணிலவின் தண்மையினில் உன்தன்மை கண்டேன்
விண்போல உனதன்பு விரிந்திருக்கக் கண்டேன்!
கருங்கூந்தல் கலைந்தோடி காரிருளை விரட்டும்
கரந்தாங்கும் சூலமெங்கள் கர்மவினை விரட்டும்
நீண்டுதொங்கும் நாவெங்கள் நீள்துன்பம் விரட்டும்
நெருப்பாகச் சிவந்தகண்கள் நெருங்கும்பகை விரட்டும்!
காலத்தை வென்றவளின் பாதங்கள் சரணம்
கோபத்தால் நீதிநிலை நாட்டும்அன்னை சரணம்
பிள்ளையென உன்பதங்கள் பணிந்துவிட்டோம் சரணம்
அன்னையெனக் காத்தருள உடன்வருவாய் சரணம்!
--கவிநயா
Subscribe to:
Post Comments (Atom)
அன்னையே சரணம்...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Deleteசரணம் அன்னையே!!. மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி பார்வதி.
Deleteகரியவளே ஆனாலும் கருணையுள்ளம் கொண்டவள்
ReplyDeleteபரிவுடனே ஓடிவந்து பக்தர்களைக் காத்திடுவள்
உரிமையோடு அழைத்திடவே உளம்மகிழ்ந்து அருளிடுவள்
பெரியவளே இவள்பெருமையைப் பாடினரேக் கவிநயமாய்!
அட, நான் பெரியவளா? :) ரொம்ம்ம்ம்பச் சிறியவள்.
Deleteவருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி அண்ணா.