Monday, October 28, 2013

நான்மாடக் கூடலின் நாயகி



சுப்பு தாத்தா அப்போதே அருமையாகப் பாடி அனுப்பி விட்டார்... சில சொந்த பிரச்சனைகளால் உடனடியாக இட முடியவில்லை... மன்னியுங்கள். மிக்க நன்றி தாத்தா!



நயன தீக்ஷை அருள்பவளாம் நங்கை மீனாக்ஷி
நான்மாடக் கூடலிலே நாயகி ஆட்சி
(நயன)

சுந்தரனைச் சொந்தங் கொண்ட சுந்தரியாம்
மந்திரமாய் மனங் கவர்ந்த மாதங்கியாம்
கடம்ப வனம் வாழுகின்ற கற்பகமாம்
விடமுண்ட கண்டன் போற்றும் அற்புதமாம்
(நயன)

கிளி கொஞ்சும் மொழியுடைய பெண்ணிவளாம்
கிளி தாங்கி நிற்கும் எழிற் கன்னியளாம்
வாள் சுழற்றும் வீறு கொண்ட மங்கையளாம், விழி
மீன் சுழற்றி நம்மைக் காக்கும் கண்ணியளாம்
(நயன)


--கவிநயா

5 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. மீனாட்சியின் அருளாட்சிக்கு என்ன குறை!
    அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்!
    அன்புடன்
    திவாகர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திவாகர் ஜி.

      Delete
  3. சுப்பு தாத்தா பாடித் தந்ததை இப்போதுதான் இட முடிந்தது. மீண்டும் வருகை தந்து கேட்டு மகிழுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete