Monday, December 2, 2013

மௌனம் ஏனடி?


சுப்பு தாத்தா தர்பாரி கானடா ராகத்தில் மிக உருக்கமாகப் பாடி அழ வைத்து விட்டார்... மிக்க நன்றி தாத்தா!

 


கவலையெல்லாம் உன்னிடத்தில் தந்து விட்டேன் அம்மா
காப்பாற்றும் பொறுப்பு இனி உன்னிடத்தில் அம்மா
மலையைக் கூட மடுவாக்கும் மாசக்தி அம்மா, என்
கவலையெல்லாம் கடுகாக்கிக் காத்திடுவாய் அம்மா!

கண்ணீரால் பாதங்களைக் கழுவினேனடி, அதைப்
பன்னீராய்க் கொண்டு மனம் குளிருவாயடி
செந்தீயில் வெந்தாலும் உன்னைத்தானடி, குளிர்
சந்தனமாய்க் கொண்டிருக்கேன் என்னைப் பாரடி!

கன்றின் குரல் கேட்காத பசுவும் ஏதடி, நீயும்
எந்தன் குரல் கேட்காமல் இருப்பதேனடி?
அன்பு மிகும் அன்னையென்றால் மௌனம் ஏனடி, என்
அன்பில் ஏதும் குறையுமுண்டோ நீயும் கூறடி!


--கவிநயா

6 comments:

  1. மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழி சிறப்பான பாடற் பகிர்வுக்கும் இன்றைய வலைச்சர
    அறிமுகத்திற்கும் .http://blogintamil.blogspot.ch/2013/12/blog-post_21.html?showComment=1387580474711#c859450032643003725

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாளடியாள். வலைச்சர அறிமுகம் பற்றித் தெரிவித்தமைக்கும் நன்றிகள்.

      Delete
  4. ச்க்தி மிக்க மௌனத்தின் குரல் அருமை...

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete