Monday, December 9, 2013

சிந்தையெல்லாம் நீயே!


உந்தனையே பாடிடவே வரமருள்வாயே
சந்ததமும் உனைப் பணிய அருள்புரிவாயே, அம்மா
(உந்தனையே)

சிந்தையெல்லாம் நீயே, அதில்
விந்தையென்ன தாயே?
சொந்தமெல்லாம் நீயே, என
ஆகி விட்டேன் நானே
(உந்தனையே)

ஆதி அந்தம் இல்லாத அன்புத் தாயடி, சிவன்
பாதி அங்கம் பங்கு கொண்ட மங்கை நீயடி
ஜோதி வடிவான மலை தெய்வம் தானடி, அந்த
ஜோதியுள்ளே ஜோதியான இன்பம் நீயடி
(உந்தனையே)

சேதி சொல்லத் தூது செல்லத் தோழி ஏதடி, எந்தன்
வேதனையைப் பாட்டில் சொன்னேன் கொஞ்சம் கேளடி
வாதம் கீதம் செய்யவில்லை வம்பு ஏனடி, உந்தன்
பாதம் பற்றிக் கொண்டு விட்டேன் திரும்பிப் பாரடி
(உந்தனையே)


--கவிநயா
 

4 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete
  2. அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்! எனக்குமே பிடிச்ச பாட்டு :)
      தனபாலன், ஷைலன் ரெண்டு பேரும் மன்னிக்கணும். பதில் எழுதிட்டதாகவே நினைச்சிக்கிட்டிருந்தேன். அதனால்தான் தாமதம்.

      Delete