சரணம் சரணம் சரஸ்வதி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ நீக்கு மனமருளே.
செங்கமலத்துதித்த சதுர்முகன் பத்தினி !
வெண்கமலம் அமர்ந்து உலகாளும் உத்தமி !
வெண்ணன்ன வாகினி!வரப்ரதாயினி !
வெண்கலையில் மின்னுந்தேவி !சுஹாசினி !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ நீக்கு மனமருளே.
ஏட்டுச் சுவடியும் , அக்ஷர மாலையும்
ஏந்திடுங்கரத்தாளே !பணிந்தேனுன் பூந்தாளே !
மெய்ஞான வாரிதியே !பாராளும் பாரதியே !
ஸ்ருங்ககிரி சாரதையே!சரணம் சரஸ்வதியே !
ஞாலமெல்லாம் போற்றும் நாமகளே!
ஞானவொளியால் நீ நீக்கு மனமருளே.
No comments:
Post a Comment