Monday, January 19, 2015

கருணை மழை பொழிவாய்!

ஹம்ஸத்வனியில் சுப்பு தாத்தா அருமையாகப் பாடியதைக் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



கருணை மழை பொழிவாய்
தருணம் இதே, அருள்வாய் - அம்மா
(கருணை)

வறண்ட நிலம் மீதில் வான்பொழி மழை போல
வாடும் பயிருக்கு மேகந்தரும் கொடை போல
(கருணை)

முன்னை வினையாவும் மூழ்கித் தொலைந்திடவே
எண்ணும் மனமெல்லாம் நீயே இருந்திடவே
பண்ணும் செயலெல்லாம் பணியாய்த் திகழ்ந்திடவே
பகரும் சொல் உந்தன் புகழாய்ச் சிறந்திடவே
(கருணை)

--கவிநயா

2 comments:

  1. முன்னை வினையாவும் மூழ்கித் தொலைந்திடவே
    எண்ணும் மனமெல்லாம் நீயே இருந்திடவே
    பண்ணும் செயலெல்லாம் பணியாய்த் திகழ்ந்திடவே
    பகரும் சொல் உந்தன் புகழாய்ச் சிறந்திடவே
    கருணை மழை பொழிவாய் எனக்கும்தான் அம்மா!

    அழஹான வரிகள் !
    நன்றி அக்கா!

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete