Monday, March 16, 2015

ஆயிரம் நாமங்கள் கொண்டவளே!

அம்மாவின் அருளால் அம்மன் பாட்டின் 500-வது பதிவாக வருகிறது இந்தப் பாடல்.

தர்மாவதி இராகத்தில் மிகப் பொருத்தமாக சுப்பு தாத்தா பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா!



தர்மாவதி இராகத்தில் கொஞ்சம் வேறு மாதிரி மீண்டும் சுப்பு தாத்தா பாடியிருக்கிறார்... அவருடைய வார்த்தைகளில்: "ஒரு தரம் பாடி மனம் திருப்தி அடைய வில்லை. அதே தர்மாவதி ராகத்தில் வேறு மாதிரி பாடுவோம் எனத் தோன்றியது." மிக்க நன்றி தாத்தா!


ஆயிரம் நாமங்கள் கொண்டவளே, எங்கள்

அம்பிகையே, ஆதி சக்தி தாயே!

பாதங்கள் பணிந்து போற்றுகின்றோம், எங்கள்

பாவங்களைத் தீர்த்துக் காத்திடுவாய்!



வேதங்கள் போற்றிடும் மாதவியே, எங்கள்

வேண்டுதலைக் கொஞ்சம் கேட்டிடுவாய்!

சோதனைக ளெல்லாம் தாண்டி வந்து உன்னைச்

சொந்த மெனக் கொண்டோம் காத்திடுவாய்!



அன்பு மிகக் கொண்டு உன்னை நாடி வந்தோம்

அம்பிகையே, ஆதி சக்தி தாயே!

துன்பங்கள் எத்தனை வந்த போதும் உன்னை

நம்பிப் பற்றிக் கொண்டோம் காத்திடுவாய்!



ஆதரவு காட்ட உன்னையன்றி வேறு

யாரு மில்லையென்று நீ அறிவாய்!

வாதம்கீதம் ஏதும் செய்யாமல் நீயும்

வேகங் கொண்டு வந்து காத்திடுவாய்!


--கவிநயா 

4 comments:

  1. அருமை...

    500 - 5000 ஆகவும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. மிக்க நன்றி தனபாலன்!

    ReplyDelete
  3. 500 மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் !
    அக்கா, சுப்புதாத்தா இருவருக்கும் அழகான வரிகளால் அம்மாவை பாடுவதற்கு உங்களுக்கு ஆயுள் ஆரோக்கியத்தையும் ஷேமதையும் அம்மா அளிப்பாவஹா !

    ReplyDelete
    Replies
    1. காணுமேன்னு பார்த்தேன். மிக்க நன்றி ஷைலன். தவறாது வருகை தரும் உங்களைப் போன்ற அனைவருக்கும் அதே விதமான ஆசிகளை அம்மா அளிக்கட்டும்.

      Delete