Monday, August 10, 2015

வாருமம்மா!


நாட்டுப்புறப் பாடல் மெட்டில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பது... மிக்க நன்றி தாத்தா!



மலர்களெல்லாம் உனக்கே மாரியம்மா, என்

மனதினிலே மணக்க வாருமம்மா!

கனிகளெல்லாம் உனக்கே காளியம்மா, என்

மனதினில் கனிந்திருக்க வாருமம்மா!

(மலர்களெல்லாம்)



மண்டி வரும் வேதனைகள்

மந்திரமாய்த் தீர்ப்பவளே!

கொண்டு வந்த வினைகளெல்லாம்

கொன்றொழிக்கும் தூயவளே!

முத்துத் தமிழ்ப் பாடல் கேட்டு மாரியம்மா

முல்லை மலர்ச் சிரிப்பழகி வாருமம்மா!

(மலர்களெல்லாம்)



அண்டி வரும் அடியவர்க்கு

அருள் நிழல் தருபவளே!

சண்டியெனவே வந்து

சங்கடங்கள் களைபவளே!

வேகங் கொண்ட வேங்கையளே காளியம்மா

சூலங் கொண்டு எம்மைக் காக்க வாருமம்மா!

(மலர்களெல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment