இடப வாகனத்தில் எழுந்தருள்வாய்
தேவி
இடர்களெல்லாம் களைந்து அருள்
புரிவாய் தேவி
சுடர் அமுதீசனுடன் சொக்கன் சபேசனுடன்
இடம் அமர்ந்து வருவாய், இன்ப
நிலை தருவாய்!
(இடப)
கடம்பவன அமர்ந்த கற்பகமே
விடம் அமுதாக்கித் தந்த அற்புதமே
தொடரும் வினை விரட்டும் பொற்பதமே,
உன்னைத்
தொழுதால் அருள் கிடைக்கும் அக்கணமே!
(இடப)
அகமெங்கும் உனதன்பால் கனிந்திடவும்
ஜகமெங்கும் உனதருளால் நிறைந்திடவும்
சகலமும் நீயென நான் உணர்ந்திடவும்,
என்
சகலமும் உன்னைச் சரண் அடைந்திடவும்
(இடப)
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.shyamartworks.com

கடவூரில் அருளும் அஞ்சுகமே!
ReplyDeleteகடலைச்சிறிதாக்கும் அன்பகமே !
படுமோ என்சிரத்தில் உன்பதமே ?
கடையனுக்குத் தேவை அச்சுகமே ! [இடப]
அழகான கவிதை வரிகளுக்கு நன்றி அம்மா!
Deleteமன்னிக்கவும் கொஞ்சம் லேட் ஆயிடுது . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ,
ReplyDeleteகவிதை அருமை !
நன்றி அக்கா !
மிக்க நன்றி ஷைலன்!
Delete