நாவினில் நடனமிடும் நாயகி உன் நாமம்
பாவினில் பதம் தூக்கி ஆடிடும்
உன் பாதம்
(நாவினில்)
அடிமுடி காட்டாத அண்ணா மலையானை
நொடியதும் பிரியாமல் இடங் கொண்ட
என் தாயே
(நாவினில்)
காவென வருவோரைக் காத்திடும் என்
தாயே
தாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய்
நீயே
வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய்
தாயே
போவெனத் தள்ளாமல் புகல் தருவாய்
நீயே
(நாவினில்)
--கவிநயா
"காவென வருவோரைக் காத்திடும் என் தாயே
ReplyDeleteதாவெனக் கேட்பதெல்லாம் தந்திடுவாய் நீயே
வாவெனக் கதறுகின்றேன் வந்தருள்வாய் தாயே
போவெனத் தள்ளாமல் புகல் தருவாய் நீயே"
அழகான வரிகள்
நன்றி அக்கா!
Miga alagaga irukkirathu.
ReplyDeleteNatarajan
மிக்க நன்றி, ஷைலன், திரு.நடராஜன்.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅருமை
ReplyDelete