என்ன தவம் செய்தனை ?
[1]என்ன தவம் செய்தனை ? வெண்ணிலவே !
அன்னை தன் சென்னியில் மலரென அணிந்திட
என்ன தவம் செய்தனை ?
பாராளும் பேரழகி கார்குழலில் அமரும்
பேறுதனைப் பெற்றே பெருமிதமடைந்திட
என்ன தவம் செய்தனை ?
[2] என்ன தவம் செய்தனை ? அஞ்சுகமே !
அன்னையின் வேயுறு தோளிலமர்ந்திட
என்ன தவம் செய்தனை ?
தேன்மொழித்தேவியின் மேனியமர்ந்து அவள்
வாணியைச்சுவைத்துப் பயிலும் சுகம்பெற
என்ன தவம் செய்தனை ?
[3]என்ன தவம் செய்தனை ?செங்கரும்பே!
அன்னைப் பூங்கரத்தால் வில்லெனத்தாங்கிட
என்ன தவம் செய்தனை ?
மதனை எரித்த ஈசன் இதயந்தனைக் கவர்ந்த
மதங்கன்மகள் மலர்க் கரம் உன்னை ஏந்திட
என்ன தவம் செய்தனை ?
அழஹான வரிகள் !
ReplyDeleteநன்றி லலிதா அம்மா!
நன்றி SHYLAN !
Delete