Monday, June 20, 2016

என்றும் மறவேன்...





 சுப்பு தாத்தா முருகப் பாடிது... மிக்நன்றி தாத்தா!
 

எத்தனை துன்பங்கள் வந்தாலும், அம்மா

என்றும் உனை மறவேன்

அத்தனையும் சிறு தூசாகும், நீ

அருகிருந்தால், அறிவேன்



சித்திரக் கண்ணே நித்திலமே

சிந்தையில் நிற்பதுந்தன் பொற்பதமே

பித்தனவன் மயங்கும் முத்தினமே

நித்தமும் துதித்திருப்பேன் அற்புதமே



சத்திய வடிவேஉன் கால்கள் பிடித்தேன்

பத்திரமாய் என்னைக் காப்பாயே

உத்தமியே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

இக்கணம் அருள் மழை பொழிவாயே


--கவிநயா 


1 comment:

  1. சுப்புத்தாத்தா அருமையாகப் பாடியிருக்கிறார் பாடல் வரிகளும் அருமை

    கீதா

    ReplyDelete