Monday, June 6, 2016

அவளே அருள்வாள்!




மோத்தில் சுப்பு தாத்தா மோமாய்ப் பாடித் தந்து... மிக்நன்றி தாத்தா!
 

நாளும் நமக்கு அருள்வாள்!
நாயகி துணை வருவாள்!
நாமம் சொல்லி நாடும் பேருக்கு
நன்மைகள் எல்லாம் தருவாள்!

கனியிதழ் முறுவல் காட்ட, இரு
கருவிழி கருணை கூட்ட
காலடி விழுந்து தொழுதிடும் பேர்களைக்
காப்பாற்ற ஓடோடி வருவாள்!

காற்றும் மழையும் அவளே, அவள்
கருணை பொழியும் முகிலே!
காலம் சுழல்வது அவளால், அந்தக்
காளிதேவி யவள் அருளால்!

வேதத்தின் நாதம் அவளே!
வேண்டுவ தவளின் அருளே!
கீதம் பாடும் குயில்போல், அவள்
புகழ்பா டுவதென் தொழிலே!


--கவிநயா 

2 comments:

  1. காற்றும் மழையும் அவளே, அவள்
    கருணை பொழியும் முகிலே!
    காலம் சுழல்வது அவளால், அந்தக்
    காளிதேவி யவள் அருளால்!

    வேதத்தின் நாதம் அவளே!
    வேண்டுவ தவளின் அருளே!
    கீதம் பாடும் குயில்போல், அவள்
    புகழ் கேட்பது என் தொழிலே!


    அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete
  2. //புகழ் கேட்பது என் தொழிலே!//
    மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete