ஓமென்னும் ப்ரணவத்தின் நாயகியே உனைத்தானே அழைக்கின்றேன் வா உமையே (ஓமென்னும்)
கருணை பொழிந்திடும் கருவிழிகள் உடன் அருள் சுரக்கின்ற திருக் கரங்கள் முறுவல் நெளிகின்ற கனியிதழ்கள் கண்டவுடன் ஓடிவிடும் வல்வினைகள் (ஓமென்னும்)
முடி முதல் அடி வரை எழில் பொங்கும், எந்தன் சிந்தையெங்கும் மதிமுகத்தின் ஒளி தங்கும் ஆதி சிவன் ஒரு புறத்தில் அவள் பங்கும் எண்ண எண்ண நெஞ்சமெங்கும் இன்பம் பொங்கும் (ஓமென்னும்)
No comments:
Post a Comment