கீதாம்மாவின் குழையும் குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
அம்மா
உந்தன் திருவடியே
கதியென்றேனே
அருள் புரியேன்
சொன்னால்
போதும் உன் நாமம்
தன்னால்
தீரும் வினை யாவும்
(அம்மா)
கண்ணே
மணியே களித்தேனே
உனை
எண்ணுகையில் மனம் களித்தேனே
தாயாய்ச்
சேயாய் நினைத்தேனே, என்
சொந்தமும்
பந்தமும் நீதானே
(அம்மா)
சிறகில்லாத
பறவையம்மா, என்
சிறகாய்
உன்னன்பைத் தருவாயம்மா
உனதருளாலே
பறக்கின்றேன், உன்
நினைவால்தான்
தினம் சிரிக்கின்றேன்
(அம்மா)
சித்தம்
எல்லாம் சிவை மயமே, என்
சொத்தாய்
நீயிருக்க ஏன் பயமே?
பற்றிக்
கொண்டேன் உன் பதமே, என்
பக்கம்
வர இன்னும் தாமதமேன்?
(அம்மா)
--கவிநயா
No comments:
Post a Comment